பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தண்

  • உழைப்பது என்பது புரட்சியின் சிவப்புக் கொடியில் பதிக்க்ப் பட்டுள்ளது. அது மக்களுக்கு வாழ்வளித்து, அவர்களின் மனம், உறுதி நெஞ்சங்களை வளர்ப்பதால், அது தூய்மையானதாகும். மைக்கேல் காலினின்
  • புரட்சி என்னும் சிவப்புக் கொடியில் உழைப்பு எண்பது பொறிக்கப் பட்டுள்ளது. மக்களுக்கு வாழ்வளித்து, அவர்களின் மனத்தை, உறுதியை, நெஞ்சத்தை வளர்ப்பதால், உழைப்பு என்பது புனிதமானது. அலெக்சாண்டர் ப்ளோக்
  • நமது வேலை செய்வது என்பதற்கான உரிமை, நீ வாழ்வதற் காக பொருளீட்டுவது எண்பதற்கான எளிய உரிமையன்று;

முதன் முதலான படைப்பிற்கான ஒர் உரிமையாகும்.

ஆண்டன் மெக்ரண்கோ

  • வேலை செய்வது எண்பதுதான் கடமை என்பது, வாழ்க்கையின் எதிர்மறைப் பகுதி என்ற அளவில் முன்னமேயே முற்றுப் பெற்று விட்டது. மனித பற்றுக்குத் தேவையான ஒரு கடுமையான வகை யினதாக இன்னமும் அது இருக்கவில்லை. நம்மைப் பொறுத்த வரை அது அனைத்திலும் முதலாகத் தனிப்பட்டவரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்ற ஒரு திட்டத்துடன், வாழ்க்கை பற்றிய மகிழ்ச்சி நிறைந்த கண்ணோட்டங்களுடன் மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டதாகும். ஆண்டன் மெக்ரண்கோ
  • நமது சமுகத்தில் வேலை என்பது ஒரு பொதுவான பொருளா தாரக் கோட்பாடன்று; அது ஒரு மெய்மைக் கோட்பாடாகவும் ஆகும். ஆண்டண் மெக்ரண்கோ * தனது வேலையை செய்யாமல் தட்டிக் கழிப்பவன், மற்றவர்கள் வேலை செய்வதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பவன், மற்றவர்களின் உழைப்பின் கனியைப் பயன்படுத்துபவன் சோவியத்துச் சமுகத்தில் உள்ள மிகுந்த ஒழுக்கங் கெட்டவன் ஆவான். ஆண்டன் மெக்ரன்கோ

‘94