பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

இருப்பதற்காகத் தன் மாமனாரின் மற்ற பெண்களுக்கும் திருமணம் செய்ய ஏற்படும் செலவுகளுக்காக அவர் ஏராளமாகப் பொருள் உதவ வேண்டியிருந்தது. மேலும் அவளுடன் ஒற்றுமையாக இருப்பதற்காக, அவளுடைய சகோதரர்களில் ஒருவனைத் தன் செலவில் முதல் போட்டுத் துணி வியாபாரம் செய்யக் கிழக்கத்திய நாடுகளுக்கும், இன்னொருவனைப் பட்டு வியாபாரம் செய்ய மேற்கத்திய நாடுகளுக்கும், மற்றொருவனைப் பிளாரென்ஸ் பட்டணத்திலேயே தங்க வியாபாரம் செய்வதற்கும் அனுப்ப வேண்டியதாயிருந்தது. இந்தத் தொழில்களுக்காக அவருடைய பொருளிற் பெரும் பகுதி கரைந்துவிட்டது.

திருநாள் காலத்திலும் செயின்ட்ஜான் தினத்திலும் நகர் முழுவதும் தொன்றுதொட்ட வழக்கப்படி விழாக் கொண்டாடியது. பணக்காரர்களும், உயர் குலத்தின்ரும் ஆடம்பரமான விருந்துகள் நடத்தி ஒருவரையொருவர் சிறப்பித்துக் கொண்டார்கள். சீமாட்டி ஹானெஸ்டாவும், மற்ற பெண்களால் தாழ்த்தியாகக் கருதப்பட விரும்பாமல் மற்ற எல்லோரைக் காட்டிலும் மிக உயர்ந்த ஆடம்பரத்துடன் விருந்து வைக்கும்படி ரோடெரிக்கைக் கேட்டுக்கொண்டாள். இந்தச் செலவுகளையும் அவர் முன் கூறிய அதே காரணங்களுக்காகப் பொறுத்துக் கொண்டார். இந்தக் கட்டுப்பாடில்லாத பொறுக்க முடியாத செலவுகளினாலும், இறுமாப்பாக மனைவி நடந்து கொண்டதாலும் அவருக்கு எல்லையில்லாத கவலை ஏற்பட்டது. அந்த வீட்டில் எஜமானியம்மாளுக்கு அடங்கி நடக்காத வேலைக்காரர்கள் யாரும் இல்லை. ஆகவே ரோடெரிக் பிரபு தமக்கென ஒரு நம்பகமாக ஆளை வைத்துக் கொள்ள முடியாமல் பெரிதாகத் திண்டாடினார். மற்றவர்களைப் பற்றி ஏன் சொல்ல வேண்டும்? நரகத்திலிருந்து அவர் தம்முடன் அழைத்து வந்த வேலைக்காரர்களோ, இங்கே அந்தப் பெண்மணியின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு அடிமைகளாய் திரிவதைவிட நரகத்து நெருப்புக் குழிக்கே திரும்பிப் போய்விடலாமென்று நினைத்தார்கள்.

கலக்கமும், குழப்பமும் சூழ்ந்த இந்த நிலையில், ரோடரிக் பிரபு தம் கையிருப்பு ரொக்க முழுவதையும் அதிகச் செலவு செய்துவிட்டார். அதற்குமேல் கிழக்கு நாடுகளிலிருந்தும் மேற்கத்திய நாடுகளிலிருந்தும் வர வேண்டிய வியாபார முதலீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவர் இன்னும்