பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

உனக்குத் தெரிவிக்கிறேன். நான் ஒரு பேய்த் தலைவன்!” என்று சொல்லி அவர், தன்னைப் பற்றியும், நரகலோகத்தில் தனக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பற்றியும், தான் கட்டிக்கொண்ட மனைவியைப் பற்றியும் சொல்லி, அந்த விவசாயியைப் பணக்காரானாக்கும் வழியையும் சொன்னார். அவனைப் பணக்காரனாக்க ரோடெரிக் பிரபு சொன்ன வழி இதுதான்! யாராவது ஒரு பெண்ணுக்குப் பேய் பிடித்திருக்கிறதென்று கேள்விப்பட்டால், ரோடெரிக் தான் அவள் உடலில் புகுந்திருக்கிறார். என்பதை விவசாயி தெரிந்து கொள்ள வேண்டும். அவன் பேயோட்ட வந்தாலொழிய அவர் அந்தப் பெண்ணை விட்டுப் போகமாட்டார். அந்தப் பேய் பிடித்த பெண்ணின் குடும்பத்தாரிடமிருந்து விவசாயி தான் விரும்பிய தொகையைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டியது. அவர்கள் இந்த ஒப்பந்தத்தைச் செய்து முடித்துக்கொண்ட பின் ரோடெரிக் பிரபு அங்கிருந்து மறைந்துவிட்டார்.

பிளாரென்ஸ் பட்டணம் முழுவதும், அம்புரூ லோஜியோவின் மகள் ஒருத்திக்குப் பேய் பிடித்திருக்கும் செய்தி பரவ அதிக நாட்கள் ஆகவில்லை. அவர்கள் பேயோட்டுவதற்கு வழக்கமாகக் கையாளுகின்ற முறைகளையெல்லாம் தவறாமல் கையாண்டார்கள். பேய் பிடித்த பெண்ணின் தலையில் புனித ஞானி செனோபியசின் மண்டையைக் கொண்டு வந்து வைத்தார்கள். ஞானி ஜான்லால் பெர்ட்டின் மேலங்கியைக் கொண்டு வந்து வைத்தார்கள்; இவற்றையெல்லாம் கண்டு ரோடெரிக் வெறும் பரிகாசச் சிரிப்புத் தான் சிரித்தார். அந்தப் பெண்ணுக்குப் பெரும் மனோவேதனையால் இந்த மாற்றம் ஏற்படவில்லை. பேய்தான் பிடித்திருக்கிறது என்பதை மெய்ப்பிப்பதற்காக அவர் லத்தின் மொழியில் பேசினார். தத்துவ விசாரணைகள் செய்தார். பல பேர்களுடைய பாப காரியங்களை வெளிப்படுத்தினார். ஒரு சன்னியாசியின் பெயரைக் குறிப்பிட்டு அவர் சீடன் வேடத்தில் நான்கு வருடங்களாகத் தம் அறையில் ஒரு பெண்ணை வைத்திருப்பதையும் அம்பலப்படுத்தினார். இந்த மாதிரியான ஊழல் உண்மைகள் ஒவ்வொருவரையும் வியப்பிலாழ்த்தின.

அம்புரூலோஜியோ தம் குமாரியைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையே இழந்துவிட்டார். இந்தச்