பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117


கலி : பிளாரென்ஸ்காரர்கள் யார் வந்தாலும் நம் வீட்டிற்கு வரவேற்று விருந்து வைப்பதுதான் என் வழக்கமாயிற்றே? நண்பன் காமிலோ கல்பூசியும் அவ்வாறே என்னால் சிறப்பிக்கப்பட்டான். ஒருநாள் சாப்பாட்டுக்குப் பிறகு நாங்கள் எந்த நாட்டுப் பெண்கள் அழகிகள் என்று விவாதித்துப் பேசிக்கொண்டிருந்தோம். இத்தாலியப் பெண்கள் தான் அழகிகள் என்று காமிலோ வாதாடினான். இன்னொரு நண்பன் பிரெஞ்சுப் பெண்களுக்கு நிகரான அழகிகள் உலகத்திலேயே கிடையாதென்றான். கடைசியில், இத்தாலியப் பெண்கள் எல்லோரும் அழகிகள் அல்ல என்று காமிலோ ஒப்புக் கொண்டாலும், தனக்குச் சொந்தக்காரியான ஒரு பெண்ணுக்கு ஈடான அழகி உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து தேடினாலும் கிடைக்கமாட்டாளென்று உறுதியாகக் கூறினான்.

சிரோ : புரிகிறது! புரிகிறது. அடுத்து என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதும் எனக்கு இப்போதே தெரிகிறது!

கலி : சரி, கேள். நிக்கியா என்பவரின் மனைவி லுக்கிரியோவின் பெயரைச் சொல்லி அவள் அழகையும், வடிவையும் பலவாறாகப் புகழ்ந்து பாராட்டிப் பேசினான் அவன். அது என் இதயத்தில் அப்படியே பதிந்துவிட்டது. இங்கு வந்தபின் அந்த அழகி லுக்கிரியோவின் புகழ் உண்மையிலேயே பெரிதாக இருந்தது. எனக்கு எப்படியாவது அவளையடைந்த்ாக வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிவிட்டது.

சிரோ : பாரிசில் இருக்கும் போதே நீங்கள் என்னிடம் சொல்லியிருந்தால் தகுந்த புத்திமதி சொல்லியிருப்பேன்.

கலி : டேய் உன் புத்திமதியொன்றையும் நான் எதிர் பார்க்கவில்லை. இதில் உன் உதவியையே எதிர்பார்க்கிறேன்.

சிரோ : தாராளமாகச் செய்கிறேன்! ஆனால், உங்களுக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதோ?

கலி : அதற்குத் தான் வழியேயில்லாமல் இருக்கிறது. முதலாவதாக அந்த அழகியின் குணமே என் எண்ணத்திற்கு நேர்மாறானதாக இருக்கிறது. அவள் உத்தமபத்தினி. காதலைப் பற்றிச் சிறிதும் எண்ணாத கற்புக்கரசியாக இருக்கிறாள். அத்துடன் அவள் சொற்படி ஆடுகிற ஒரு பணக்காரனைக் கணவனாகப் பெற்றிருக்கிறாள். அவன்