பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123


நிக்கியா : தீர்த்தமாடுவதைக் காட்டிலும் வேறு நல்ல வழியிருந்தால் தேவலாம். ஏனென்றால் என் மனைவிக்கு வெளியூர் போவதென்றால் மிகச் சங்கடமாயிருக்கும்.

லிகு : கருத்தரிக்க ஏதோ மருந்து கலந்து கொடுப்பதாகச் சொன்னீர்களே?

கலி : கொடுக்கலாம். ஆனால், நம்மிடம் பூரண நம்பிக்கையில்லாதவர்களுக்கு எப்படி மருந்து கொடுக்க முடியும்?

நிக்கியா : அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்.

லிகு : இவருடைய சம்சாரத்தின் நீரைப் பரிசோதிக்க மாதிரி நீர் வேண்டுமோ?

கலி : ஆம். இல்லாமல் முடியுமா?

நிக்கியா : இதோ கொண்டு வருகிறேன். (மெசர் நிக்கியா தன் வீட்டுக்குப்போய் பெரும்பாடு பட்டுத் தன் மனைவியிடம் இருந்து நீர் மாதிரி கொண்டு வருகிறார். கலிமாக்கோ அதை வாங்கிப் பார்த்துவிட்டு)

கலி : ஆ! மிகவும் பலவீனமாயிருக்கிறது! மெசர் நிக்கியா, நீர் என்னிடம் பூரண நம்பிக்கை வைத்திருக்கிறீர் என்று தெரிந்தால் நான் இதற்குச் சரியான பரிகாரம் செய்வேன். இல்லையென்றால் செய்யவே மாட்டேன். உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் மருந்து வாங்கிக் கொள்ளுங்கள். இன்னும் ஓராண்டு காலத்திற்குள் ஒரு குழந்தையை உங்கள் மனைவியின் மடியில் அது தவழவிட வில்லையென்றால் நான் உங்களுக்கு இரண்டாயிரம் நோட்டுகள் பணம் தந்துவிடுகிறேன்.

நிக்கியா : சொல்லுங்கள். கட்சிக்காரனுடைய வழக்கை கேட்பதைக் காட்டிலும் கவனமாக நான் உங்கள் யோசனையைக் கேட்கிறேன்.

கலி : மந்திரகோலா மருந்தில் ஒரு “டோஸ்” சாப்பிட்டால் போதும். எந்தப் பெண்ணுக்கும் உடனே கர்ப்பம் தரித்துவிடும். இந்த மருந்து மட்டும் இல்லையென்றால் பிரஞ்சு தேசத்து மகாராணிக்குப் பிள்ளைகள்