பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135


சாமியார் : சரி, எல்லோரும் தேவாலயத்திற்கு வாருங்கள். ஒன்றாக உட்கார்ந்து ஆண்டவனைப் பிரார்த்திப்போம். பிரார்த்தனை முடிந்ததும் நீங்கள் விருந்துண்ணப் போகலாம். நான் இங்கேயே ஆலயத்தில் இருந்து எல்லோருடைய பாவத்தையும் மறைக்கும் பணியைத் தொடர்ந்து செய்கிறேன்!



நூல் சுருக்கம் : 5
மாக்கியவெல்லியின் கடிதங்கள்

கடிதம் : 1
அரசியற் கொள்கைகளில், பலனையே கருதவேண்டும்: முறைகளையல்ல!

(பியரோ சோடர்னி) என்பவர் சிறிது காலம் பிளாரண்டைன் அரசாங்கத்தின் தலைவராக இருந்தவர் 1513-ம்ஆண்டில் இந்தக் கடிதம் எழுதப்பட்ட சமயத்தில் அவர் நாடு கடத்தப்பட்டுதால் மாட்டியாவில் இருந்தார். மாக்கியவெல்லியின் மூலமாக அவர் பிளாரென்சுக்குத் திரும்பிவர முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மொட்டையாக எழுதியனுப்பிய கடிதம் ஒன்றுக்கு மாக்கியவெல்லி எழுதிய பதில் இது. பகைவர் கையில் சிக்கக் கூடும் என்ற ஐயப்பாட்டில் எழுதப்பட்ட கடிதம் ஆகையால் இதில் பல விஷயங்கள் குழுஉக் குறியான சொற்றொடர்களில் அமைந்திருக்கின்றன. கூடுமானவரை அவற்றைப் புரிய வைக்க முயன்றிருக்கிறோம்.)

ரகுசாவில் உள்ள பியரோ சோடர்னி அவர்களுக்கு,

(தேதியிடப்படவில்லை)

உங்கள் கடிதம் ஒன்று எனக்கு முக்காடும் போர்வையுமாக வந்து சேர்ந்தது. அதாவது குளிர் நிறைந்த ஜனவரி மாதத்தில் மொட்டைக் கடிதமாக வ்ந்தது. அதாவது குளிர் நிறைந்த ஜனவரி மாதத்தில் மொட்டக் கடிதமாக வந்தது. ஆனால் அதில் பத்து வார்த்தைகளைப் படித்த மாத்திரத்திலேயே அது உங்கள் கடிதம் என்பதைத் தெரிந்து கொண்டேன்.