பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137

கொள்கைகளைப் பற்றிய முடிவுகளை அவற்றின் செயல் முறைகளைக் கொண்டு தீர்மானிக்காமல் அவற்றின் மூலம் அடைந்த பலன்களைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன்.

ஓர் இடத்திற்குப் பல பாதைகளின் மூலம் போய்ச் சேர்வது போல, ஒரே காரியத்தைப் பலவிதமான முறைகளால் செய்யலாம். பல்வேறு மக்களும், பெரிதும் வேறுபட்ட கொள்கைகளின் மூலம் தங்கள் - இலட்சிய முடிவுகளை எய்துகிறார்கள். இந்தக் கொள்கையை மெய்ப்பிப்பதற்கு இதுவரையில்லாதிருந்த சாட்சியத்தை இப்போதைய போப்பாண்டவரின் நடத்தையும் அதனால் அவர் நிறைவேற்றிய காரியங்களும் கொடுத்து விட்டன.

ஹனிபாலும் சிப்பியோவும் இராணுவத் திறமையில் ஒன்று போல் உயர்ந்த நிலையில் இருந்தவர்கள்; பல வெற்றிகளையும் அடைந்திருக்கிறார்கள். ஹனிபால், தன் இராணுவத்தை ஒன்றுபடுத்தி, இத்தாலிய மக்களின் அனுதாபத்தைப் பெற்று, அவர்களைக் கொடுமையும், சதியும், துரோகமும், அக்கிரமுமான வழிகளில் ரோமானியருக்கு எதிராகப் புரட்சி செய்யும்படி தூண்டினான். ஆனால் சிப்பியோவோ, அன்பு, நேர்மை, உண்மை ஆகியவற்றில் ஸ்பெயின் தேசத்து மக்களிடையே அதே வெற்றியை அடைந்தான். ரோமானியர்களுடைய உதாரணம் நம் நாட்டுக்குச் சரிப்படாது என்று சொன்னால், இப்போது நம் நாளிலேயே, லாரென்சோ டிமெடிசி மக்கள் ஆயுதங்களைப் பறி முதல் செய்ததன் பலனாகப் பிளாரென்சை வசப்படுத்திக் கொண்டதையும், ஜியோலாணி பெண்டிவோக்லியோ மக்களுக்கு ஆயுதம் வழங்கி போலோக்னாவை வசப்படுத்திக் கொண்டதையும் சொல்லலாம். பேரரசர் டிட்டஸ் தாம் யாருக்கோ நன்மை செய்யத் தவறியதால் தம் சிங்காதனத்தை இழக்கும் விதி ஏற்பட்டது என்று எண்ணினார். வேறு பலர் யாருக்கும் நன்மை செய்வதால் தங்கள் சிங்காதனத்தை இழக்கும்படி நேரிடும் என்று நினைத்ததாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு விஷயத்தையும் ஆற அமர யோசித்துச் செய்வதால்தான் பலர் தங்கள் குறிக்கோளில் வெற்றியடைகிறார்கள். இப்போதுள்ள போப்பாண்டவரோ, எவ்வளவு சிறந்த திட்டங்களாலும், எவ்வளவு சக்தி வாய்ந்த ஆயுதங்களாலும் செய்ய முடியாத காரியத்தை எவ்விதமான குறிக்கோளும் ஆயுதமுமின்றி வெற்றிகரமாகச் செய்து முடித்து விடுகிறார். ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டத்தின்