பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139

மாறுபாட்டுக்குத் தக்கபடி மனிதர்களை அதிர்ஷ்ட வாய்ப்புத்தான் ஆள வேண்டியதாயிருக்கிறது, கொடுமையும், துரோகமும், அக்கிரமும் நீண்ட நாட்களாக நிலவிய நாட்டிலே மனிதத் தன்மையும், நேர்மையும், உண்மையும் கொண்டு ஒருவன் கௌரவத்தையடைவது போலவே, மனிதத் தன்மையும், நோமையும், உண்மையும் நீண்ட நாட்களாக மதிப்பையிழந்து போன இடத்திலே கொடுமையாலும், துரோகத்தாலும் அக்கிரமத்தாலும் ஒருவன் மரியாதையைப் பெற்றுவிடலாம். கசப்பான பொருள்களால் சுவை ஊறுபடுவது போலவே, மிகப் பல இனிய பொருள்களால் குமட்டலும் ஏற்படுகிறது. அது போலவே மனிதர்கள் நன்மைகளால் அலுப்பும், தீமைகளால் வெறுப்பும் அடைகிறார்கள். ஹனிபாவின் கையில் இத்தாலியும், சிப்பியோவின் கையில் ஸ்பெயினும் சேர்ந்ததற்குக் காரணம் இவைதாம். காலமும் சூழ்நிலைகளும் இந்த இரண்டு மனிதர்களின் தன்மைக்கும் - போக்குக்கும் பொருந்தியிருந்தன. நாம் சொல்லுகின்ற அந்தக் குறிப்பிட்ட காலங்களில் சிப்பியோவைப் போன்ற ஒரு மனிதன் இத்தாலியிலோ அல்லது ஹனிபாவைப் போன்ற ஒரு மனிதன் ஸ்பெயினிலோ அவர்கள் இருவரும் தத்தம் தேசத்தில் அடைத்தது போன்ற வெற்றியை அடைந்திருக்க முடியாது.

நிக்கோலோ மாக்கியவெல்லி.


கடிதம் : 2
பேசினால் அரசியல் பேசவேன்: இல்லாவிட்டால்
பேசாமலிருப்பேன்!

பெருமைமிக்க பிரான்சிஸ்கோ வெட்டோரி அவர்கள், ரோமில், பிரதான குருவின் சமஸ்தானத்துக்கு அனுப்பப் பட்ட ராஜதூதர்.

ரோமாபுரி.
பிளாரென்ஸ், ஏப்ரல் 9.1513.

பெருமைமிக்க ராஜப்பிரதிநிதி அவர்களே,

தங்கள் கடந்த கடிதம். சித்திரவதை இயந்திரத்திற்கு அழைப்பதைக் காட்டிலும் மேலான பயத்தை எனக்கு உண்டாக்கிவிட்டது. எனக்குத் தீமையிழைக்கப்படும் என்று