பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

தாங்கள் கனவு காண்பது கூட எனக்கு வருத்தமளிக்கிறது. எனக்குப் பட்டுப்பட்டுப் பழக்கமாகி விட்டது. ஆனால் உங்களுக்காகவே நான் வருந்துகின்றேன். தங்கள் நல்லறிவினாலும் சாதுர்யத்தினாலும் வாழ்வதைவிடக் குறுகிய புத்தியினாலும் திறமையினாலும் தொல்லை பிடித்தவர்களாக உலகில் வாழ்க்கை நடத்துகின்றவர்களைப் பின்பற்றி நடக்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் டாட்டோ பற்றிச் சொன்ன விஷயத்தை முன்னிட்டு உங்களுக்காக நான் வருந்துகிறேன். உண்மையில் நான் அந்த விஷயத்தை முக்கியத்துவமுடையதாக எண்ணவில்லை. உருட்ட முடியாத கல்லைப் புரட்டிப் பார்க்க வேண்டும். நான் ஏதேனும் உங்களிடம் கேட்கும் பொழுது, எனக்காக நீங்கள் துன்பத்திற்காளாகும்படி நடந்துகொள்ள வேண்டாம் என்பதை எப்பொழுதும் போல இப்பொழுதும் நினைவு படுத்துகின்றேன். ஏனென்றால் நான் விரும்புகிற விஷயத்தில் பலன் பெறவில்லையென்றால், அதற்காக நான் அப்படியொன்றும் பெருந்துன்பம் அடைந்துவிடப் போவதில்லை.

பல விஷயங்களில் ஒன்றை எதிர்பார்த்திருக்க வேறு வி தமாக முடிவதைக் கண்டு நீங்கள் அலுத்துப் போயிருந்தால் அதனால் தவறில்லை. ஏனெனில் என் விஷயத்திலும் அது மாதிரியே பல தடவை நடந்திருக்கிறது. எப்படியிருந்தாலும் - நான் உங்களை நேரில் சந்திக்க முடிந்தால், உங்கள் மனத்தில் விதவிதமான மனக் கோட்டைகளை நிரப்பாமல் என்னால் இருக்க முடியாது. பட்டு வியாபாரத்தைப் பற்றியோ, கம்பளி வியாபாரத்தைப் பற்றியோ அல்லது லாப நட்டக் கணக்குகளைப் பற்றியோ பேசாமல் அரசியலைப் பற்றிப் பேச வேண்டும் என்று எனக்கு விதி ஏற்பட்டிருக்கிறது. எனக்கு ஒரே ஒரு வழியிருக்கிறது. ஒன்று அரசியல் பேச வேண்டும் அல்லது பேசாமல் இருப்பதாக உறுதி பூண வேண்டும்.

நிக்கோலோ மாக்கியவெல்லி
செயலாளர் எர்ஸ்ட்வெல்.