பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

பெரியவர்களைப் போல் காரிய சித்தியடைவதற்காக, முற்காலத்திலிருந்த மிகப் பெரியவர்களைப் பின்பற்றி நடக்க முயல்வார்கள்.

சொத்துடைமை

பெரும்பாலான மக்கள் கெளரவத்தை விடத் தங்கள் சொத்துக்களையே பெரிதாக மதிக்கிறார்கள்.

தங்கள் தந்தை இறந்ததை எளிதாக மறந்து விடுவது மக்கள் இயல்பு. ஆனால், தங்கள் பிதிரார்ஜித சொத்தை இழப்பதை மட்டும் அவர்கள் மறக்கவும் மாட்டார்கள்! பொறுக்கவும் மாட்டார்கள்

தலைவர்கள்

பின்பற்றுவோர் இல்லாத தலைவர்கள் அதிவிரைவில் அழிந்து போவார்கள். அதனால் ஒரு பெருந்தொல்லையும் விளையாது.

பொதுமக்கள், மேலும் சிறப்பாய் வாழலாமென்று தங்கள் தலைவர்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் அதில் ஏமாற்றமே அடைகிறார்கள்.

தாழ்வு மனப்பான்மை

தாழ்வு மனப்பான்மை என்பது பயனற்றது என்பது மட்டுமல்ல, உண்மையில் துன்பந் தருவதுமாகும்.

நடு நிலைமை

பக்கத்தில் உள்ள இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால், நடு நிலைமை வகிப்பதை விட ஏதாவது ஒரு தரப்பில் சேருவதே அறிவுடமையாகும்.

தன்னைக் காட்டிலும் வலிமை மிக்கவன் பக்கம் சேர்வதைவிட, தன் உதவியை விரும்பிப் பெறக்கூடியவன் பக்கம் சேர்வதே நன்மை பயக்கும்.

நடுநிலை வகித்தவன் சந்தேகத்திற்குரியவனாகையால் வெற்றி பெற்றவன் அவனை நண்பனாகக் கருதமாட்டான். தோல்வியுற்றவனோ தனக்கு உதவி செய்யாதவனைக் காக்க முன் வரமாட்டான்.

நம்பிக்கை

உன்னையே நீ நம்பு.

நன்மை தீமைகள்

மனிதத் தன்மை நன்மையைக் காட்டிலும் தீமையின் பக்கமே சாயும். இயல்புள்ளது.

கசப்பான பண்டங்களால் சுவை ஊறப்படுவது போலவே, அதிகப்படியான இனிப்புப் பண்டங்களால்