பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157

பெரியோர்

மனிதர்கள், மிகப் பெரிய மனிதர்களைப் பின்பற்ற முயலுதல்வேண்டும்.

பெரிய மனிதர்கள் என்போர் தாங்கள் செல்லும் பாதையில் ஒவ்வோரடியிலும் குறுக்கிட்ட பேராபத்துக்களையும், பெருங் கஷ்டங்களையும் தங்கள் திறமையாலும், ஆண்மையாலும் அகற்றியெறிந்து கொண்டே மேலோங்கி வந்திருக்கிறார்கள்.

பேராசை

தேடுகிற சக்தியைக் காட்டிலும் எப்பொழுதும் ஆசை பெரிதாயிருக்கிறது.

மனிதர் தங்கள் தேவைக்காகப் போராடுகிற நிலைமை போன பிறகு தங்கள் பேராசைக்காகப் போராடத் தொடங்குகிறார்கள். அந்தப் பேராசை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. அவர்கள் எவ்வளவு உயரத்திற்குப் போன பிறகும் கூட அது அவர்கள் இதயத்தை விட்டுப் போவதில்லை.

போராட்டம்

போராடுவதில் இரு முறைகள் உண்டு. ஒன்று அறவழியில் நின்று போராடும் முறை: மற்றொன்று மூர்க்கமான பலத்தைப் பயன் படுத்தும் முறை. முதல் வழி மனிதத் தன்மை இரண்டாவது வழி மிருகங்களுக்குரியது. ஓர் ஆட்சியாளனுக்கு மனிதத் தன்மையும் வேண்டும். மிருகத் தன்மையும் வேண்டும்.

மகனுக்கு

மகனே, நீ என்னை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டுமானால், எதிலும் வெற்றிகரமாக விளங்கு. உனக்கே ஒரு மதிப்பை உண்டாக்கிக்கொள் : கடுமையாகப் பயில்; நீயாகவே நன்றாக நடந்துகொள்; கற்றுக்கொள்.

மக்கள் பிரதிநிதிகள்

மக்கள் பிரதிநிதிகள் என்போர் ஆட்சியில் மக்களின் பங்கை ஏற்பவர்களாக மட்டும் இருப்பதில்லை. மக்கள் உரிமையைப் பாதுகாப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

மதம்

இராணுவம் மட்டும் இருந்து மதம் இல்லாத தேசத்திலே ஒழுங்கு இருப்பது அரிது.

மத சாம்ராஜ்யத்தின் அதிபதிகள் மட்டுமே,