பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

ஆராய்ந்திருக்கிறான். மாக்கியவெல்லி ரோமானியரின் ஆட்சிமுறையைப் பல இடங்களில் போற்றுகிறான். தன் காலத்தவர்கள், சரித்திரம் படிக்காத காரணத்தினால்தான், கீர்த்தி வாய்ந்த முன்னோடிகளான அந்தக் காலத்துப் பேரரசர்களின் அல்லது பெரியோர்களின் பாதையைவிட்டு விலகி நடக்கிறார்கள் என்றும், அதனால்தான் பல கேடுகள் ஏற்பட்டனவென்றும் சுட்டிக் காட்டுகின்றான். முற்காலத்துப் பெரிய மனிதர்களின் வழிகளைப் பின்பற்றி நடக்க வேண்டியதன் அவசியத்தைத் தான் மாக்கியவெல்லி தன்னுடைய இந்த ஆராய்ச்சி நூலில் பெரும்பாலான இடங்களில் சுட்டிக்காட்டுகிறான்.

அரசன் :

மாக்கியவெல்லி, எழுதிய மிகப் பெரிய நூல் டீட்டஸ் லீவியசின் முதல் பத்துப் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி. ஆனால், மிகப் புகழ்வாய்ந்த நூல் "அரசன்” தான். இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமானால் அவனுக்குக் கீர்த்தியும் அபகீர்த்தியும் தேடித்தந்த நூல் அரசன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆராய்ச்சியில், அவன் பொதுப்படையாக அரசியல் விஷயங்களை ஆராய்கிறான். ஆனால் அரசன் நூலில் குறிப்பாக முடியரசுகளைப் பற்றி ஆராய்கிறான். அரசன் நூலில் அவன் தன் கருத்துக்களைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கிறான். அரசியல் விஞ்ஞானம் என்று சொல்லக்கூடிய முறையில் அரசியலைப் பற்றிப் புதுமையான சிந்தனைகளை முதன் முதலில் அவன் இந்த நூலில் தான் வெளிப்படுத்தியிருக்கிறான். என்று சொல்லவேண்டும். அவனுக்கு முன் இப்படிச் சிரித்தவர்கள் கிடையாது. எப்பாடுபட்டேனும் அரசியலில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தைத் தான் அவன் தன் அரசன் நூலில் விதைத்திருக்கிறான்.

ஓர் அரசு நிலை பெறுவதற்காகக் கையாளக் கூடிய வழிகள் எப்படிப்பட்டவையாயினும் அவை வரவேற்கக் கூடியனவே என்று இந்த நூலில் அவன் கூறுகிறான். அரசியல் வெற்றிக்காக, சூழ்ச்சியும், நேர்மையற்ற முறைகளையும் கொடுமைகளையும் - ஏன் கொலைகளையும் கூடச் செய்யலாம் என்று (நம் மகாபாரதத்து அரசியல் சகுனி மாமாவைப் போல) சொல்வதை நாகரிக மனப்பான்மையுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்க