பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

 பிற நூல்கள் :

இவை தவிர மாக்கியவெல்லி கிளீசியா என்ற ஓர் இன்பியல் நாடகத்தையும். பெல்பாகர் என்ற ஒரு நாவலையும், தலைப்பிடாமல் கவிதை நடையிலேயே இன்பியல் நாடகத்தையும் எழுதியிருக்கிறான். தனிச்செய்யுள்கள் பல இயற்றியிருக்கிறான். தான் ஒரு கவிஞன் என்று சொல்லிக் கொள்வதிலேயே அவன் பெருமை கொண்டான். ஆனால் உலகம் அவனைக் கவிஞன் என்ற பெயரில் பெருமைப்படுத்தவில்லை. ஒரு சிறந்த சிந்தனையாளன் என்ற முறையில்தான் போற்றிப் பெருமை செய்கிறது.



4. மாக்கியவெல்லியைக்
கையாண்டவர்கள்


மாக்கியவெல்லியின் ஆராய்ச்சி நூலும், முக்கியமாக அரசன் நூலும் பல தேசத்திலும் உள்ள அரசியல்வாதிகளுக்கும் பலவகைகளில் பயன்பட்டிருக்கின்றன. பல பெரிய புள்ளிகளெல்லாம் அவனுடைய நூலைத் தங்கள் காரியங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு மூலக்கருத்தைக் கொடுக்கும் கருவூலமாக மாக்கியவெல்லியின் சிந்தனையில் விளைந்த இந்த அரசியல் நூல்கள் பயன்பட்டிருக்கின்றன.

இத்தாலி தேசத்துப் பேஸிஸ்ட் ஜடாமுனியாகவும் சர்வாதிகாரியாகவும் விளங்கிய முசோலினி கல்லூரி மாணவராயிருக்கும்போது. டாக்டர் பட்டம் பெறுவதற்காகத் தான் எழுத வேண்டிய பொருளாராய்ச்சிக் கட்டுரைக்கு (Thesis) மாக்கியவெல்லியின் அரசன் நூலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

உலக மகாயுத்தம் தொடுத்த ஜெர்மனி தேசத்து ஆதிக்க வெறியனான ஹிட்லரின் படுக்கையறையில் அவன் படுத்துக்