பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

நான் நீண்ட நாட்களாகப் பெரிய மனிதர்களின் செயல்களை ஆராய்ச்சி செய்து அவற்றின் சாரத்தை இறக்கித் தங்களுக்குக் காணிக்கையாக்குகிறேன். இது தாங்கள் ஏற்றுக்கொள்வதற்குரிய மதிப்புடைய பொருள் அல்ல என்றாலும், எத்தனையோ ஆண்டுகளாக எத்தனையோ இன்னல்களுக்கிடையில் நானடைந்த அனுபவத்தைச் சுருக்கித் தருகிற நூல் என்ற முறையில் மனிதாபிமானத்தோடும் ஆதரவோடும் இதை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற உறுதி எனக்குண்டு. அலங்காரமான வார்த்தைகளைக் கொண்டு நான் இதை எழுதவில்லை.

என்னைப் போன்ற எளிய மனிதன் அரசர்களைப் பற்றியும் அரசாங்கங்களைப் பற்றியும் பேசவும் வழி காட்டவும் யோக்கியதை உண்டா என்று எண்ணிவிடக் கூடாது. மலையின் மேல் இருப்பவன் தான் சமவெளி முழுவதையும் அளக்க முடியும். மலையடியில் நிற்பவன்தான் அதன் அளவையும், உயர்வையும் பெருமையையும் உணரமுடியும். அதுபோல் எளியவரால்தான் அரசர்களின் தன்மையைச் சரியாக எடைபோட முடியும்.

ஆகவே, நான் எவ்விதமான உணர்ச்சியோடு இந்த வெகுமதியை அளிக்கிறேனோ அதே விதமான உணர்ச்சியோடு மேன்மை தங்கிய தாங்கள் இதை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இதை நீங்கள் படித்துப் பார்த்தால் உங்கள் செல்வமும் செல்வாக்கும் மேலோங்க வேண்டுமென்ற என் பெரு விருப்பத்தைக் காண்பீர்கள்.

மேன்மை தங்கிய தாங்கள் இருக்கும் அந்த மலையுச்சியில் இருந்து இந்த எளிய இடத்தை நோக்கினால், கொடிய விதியின் காரணமாக எத்தனை பெரிய நேர்மையற்ற துன்பங்கள் என்னைத் துன்புறுத்தியிருக்கின்றன என்பதைக் கண்டுகொள்வீர்கள்.

அரசாங்கத்தின் வகைகள்

மனித இனத்தைக் கட்டியாண்டு வந்த அல்லது ஆண்டு வருகிற எல்லா இராஜ்யங்களும் அரசுகளும் குடியரசுகளாகவோ அல்லது முடியரசுகளாகவோ இருக்கின்றன. முடியாட்சிகள், நெடுங்காலமாக ஒரே குடும்பத்தினரின் வழி வழி வந்த அரசர்களையுடைய பரம்பரையுரிமையாகவோ, அல்லது அண்மைக் காலத்தில்