பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

விஷயத்திற்கு இணங்கச் செய்வது என்பது எளிதான காரியமல்ல. அவர்கள் தாமாக நம்பாத காரியத்தைப் படைபலத்தைக் கொண்டு தான் நம்பச் செய்ய வேண்டும்.

இவ்வாறு தங்கள் திறமையைக் கொண்டு மேலோங்கி வந்தவர்கள், தங்களுக்குக் கீழ்ப்படியாதவர்களை அடக்கியும், தங்கள் மீது பொறாமை கொண்டவர்களை ஒடுக்கியும் ஒரு முறை மேலோங்கி வந்து விட்டால் அவர்கள் பத்திரமும் பாதுகாப்பும் வல்லமையும் உடையவர்களாய் மதிப்பிற்குரியவர்களாய் மகிழ்ச்சியுடன் நிலைத்து இருக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அதிர்ஷ்ட வசத்தால் அல்லது பிறர் ஆற்றலால்
கிடைத்த புதிய அரசுகள்

தனிப்பட்ட குடிமக்களாக இருந்து வெறும் அதிர்ஷ்டத்தால் அரசரானவர்கள். அவ்வாறு அரசராகும் போது எளிதாக உயர்ந்து வந்துவிட்டாலும், அந்த நிலையைக் காப்பாற்றிக் கொள்வதற்குள் பெரும் பாடுபட்டுப் போகிறார்கள்.

அரசைப் பெறுகின்ற பாதையில், அவர்கள் அப்படியே பறந்து வந்து விடுகிறபடியால், எவ்விதமான கஷ்டத்தையும் அடைவதில்லை. ஆனால் அவர்கள் நிலைபெறக் கூடிய சந்தர்ப்பத்தில் தான் எல்லாக் கஷ்டங்களும் உண்டாகின்றன. பணத்திற்காகவோ அல்லது ஓர் அரசனுடைய தயவினாலோ இராஜ்யங்களைப் பெற்றவர்கள் இருக்கிறார்கள். சில மன்னாதி மன்னர்கள் பட்டாளத்தினருக்கு இலஞ்சம் கொடுத்து வந்தவர்களாய் இருந்திருக்கிறார்கள். இப்படி அரசுரிமை பெற்றவர்கள் எப்பொழுதும் தங்களைத் தூக்கிவிட்டவர்களின் நல்லெண்ணத்தையும், அவர்களுடைய அதிர்ஷ்டத்தையும் முழுக்க முழுக்கச் சார்ந்திருக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் சார்ந்திருக்கக் கூடிய அந்த இரண்டு விஷயங்களுமே நிலையற்றவை; உறுதியற்றவை! அவர்களுக்குத் தங்கள் அந்தஸ்தை எப்படிக் காப்பாற்றுவதென்றும் தெரியாது; எப்படி நிர்வகிப்பதென்றும் தெரியாது! ஒரு சாதாரணக் குடிமகனாக இருந்து அரச பதவிக்கு வந்தவன் மிகப் பெரிய திறமைசாலியாய் இருந்தாலொழிய, எப்படி ஆதிக்கம் செலுத்துவதென்பது தெரியாதவனாகத் தான் இருப்பான். அப்படிப்பட்டவர்கள் தங்கள் நிலையைத் தாங்களாகவே நிலை நிறுத்திக்கொள்ள