பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

விடுவிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றமாகத் தான் முடியும். ஆனால் மக்கள் நட்பின் அடிப்படையிலே தன்னை நிலை நிறுத்திக் கொள்ளக் கூடியவனும், அதிகாரம் செலுத்தக் கூடிய ஆண்மையும் ஆற்றலும் உடையவனும், இடுக்கண்ணுக்கஞ்சாத இயல்புடையவனுமாகிய ஓர் அரசன் மக்களால் ஏமாற்றப்படவேமாட்டான்; தான் சரியான அடிப்படையிலேயே காலூன்றியிருப்பதைக் கண்டு கொள்வான்.

அரசன் தானே நேரடியாக ஆட்சி செய்யாமல். அதிகாரிகளைக் கொண்டு ஆட்சி செய்வது பேராபத்தானது. அதுவும் ஆபத்துக் காலங்களில் இந்த அதிகாரிகள் படு மோசம் செய்து விடுவார்கள். அவனுக்கெதிராகவோ அல்லது அவன் கட்டளைக்குக் கீழ்ப்படியாமலோ அவனை நிலை குலையச் செய்துவிடுவார்கள். குடிமக்களும் இந்த அதிகாரிகளிடமே உத்தரவுகளைப் பெற்றதும் அவர்களுக்கே அடங்கி நடந்தும் பழக்கப்பட்டுப் போய் விடுகிறபடியால் அவர்களையும் அரசன் தனக்கு இடுக்கண் வந்த காலத்தில் நம்ப முடியாது. ஆகவே புத்திசாலியான ஓர் அரசன் எப்போதும் மக்களுக்கு நண்பனாகயிருக்கவே முயல்வான். அவர்களும் அவனுக்கு எந்தக் காலத்திலும் உண்மையாக இருப்பார்கள்.

(குடிதழீஇக் கோலோச்சும் நில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

-திருக்குறள்.)

ராஜ்யங்களின் பலத்தை அளப்பது எப்படி? :

பலமான பாதுகாப்பையுடைய நகரத்தையுடையவனும், மக்களால் வெறுக்கப்படாதவனுமாகிய ஓர் அரசன் எப்போதும் தாக்குதலுக்குள்ளாக மாட்டான்; அப்படியே தாக்கப்பட்டாலும் அவனைத் தாக்கியவன் தான் அவமானப்பட்டுத் திரும்பிப்போக நேரிடும்.

ஜெர்மனியில் உள்ள நகரங்கள் பெருங்கோட்டைகளுடன் மிகப் பாதுகாப்பாக விளங்கின. மக்கள் எந்தச் சமயத்திலும் சக்கரவர்த்தியின் ஆணைக்குக் கீழ்ப்படியத் தயாராய் இருந்தனர். கோட்டைகளுக்குள்ளேயே ஓராண்டு காலத்திற்கு வேண்டிய உணவுப் பொருள்கள் இருப்பு இருந்து