பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

கீர்த்தியும் புகழும் வாய்ந்தவர்களுடைய அருஞ்செயல்களைப் பற்றிப் படித்துச் சமாதான காலத்தைப் பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும். அந்த அறிவைப் பயன்படுத்திக் காலம் மாறுகின்ற பொழுது எதிரிகளைத் தாக்குவதற்கும், அவர்களிடமிருந்து தன் ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்கும். இடுக்கண்களை அடுக்காக தடுப்பதற்கும் ஆயத்தமாயிருக்க வேண்டும்.

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.


புகழும் இகழும் :

ஓர் அரசன் நல்ல குணங்கள் எல்லாவற்றையும் உடையவனாயிருப்பது போற்றுதலுக்குரியதே. ஆனால், மனித இயற்கை அவை எல்லாவற்றையும் கடைப்பிடிக்க அனுமதிப்பதில்லை. ஆனால் முன்யோசனையுள்ள அரசன் தன்மீது எவ்விதமான பழிச் சொல்லும் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். தேவைக்குத் தகுந்தபடி நல்லவனாகவும் கெட்டவனாகவும் நடந்து கொள்ளவும் அவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

தாராள மனப்பான்மையும் கருமித்தனமும் :

தாராள மனப்பான்மை பற்றி உலகம் கொண்டிருக்கிற உத்தமமான முறையில் அறவழியில் கையாண்டால் அதுவெளியில் தெரியப்போவதுமில்லை; மேற்கொண்டு அதனால் அவமானமும் மாறுபட்ட பயனும்கூடக் கிடைக்கும். ஓர் அரசன் தான் தாராளமானவன் தருமவான் என்று பெயர் எடுக்க விரும்பினால் அதற்கு நிறையப் பொன்னும் பொருளும் வேண்டும். இந்தப் பொன்னையும் பொருளையும் பெறுவதற்கு அவன் வரி விதிக்க வேண்டிவரும். வரிப்பளுவைத் தாங்க முடியாத மக்கள் அவன் உதாரகுணத்தைப் புகழ்வதற்குப் பதிலாக வரிக் கொடுமைக்காகப் பழி தூற்றிப் பேசுவார்கள். பலரின் மனம் நோவச் சிலருக்குத் தான் கொடை கொடுப்பதைவிட அவன் கருமியாக இருப்பதே மேலானது.

கொடுங்கோலன் என்று பெயர் எடுப்பதைக் காட்டிலும் ஈயாத லோபி என்று பெயரெடுப்பதைப் பற்றிப் புத்தியுள்ள எந்த அரசனும் வருத்தப்படமாட்டான். தன் மக்களைச்