பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. நிலையான அரசு ஏன்?

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும் என்று அரசு நடத்துபவனின் கடமையைப் பற்றித் திருவள்ளுவர் கூறினார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அரசியல் எப்படியிருக்க வேண்டுமென்று திருவள்ளுவர் சிந்தித்தார். திருவள்ளுவர் தமிழ் நாட்டிலே பிறந்தவர்.

மேல் நாட்டிலே சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கும் முன்னால் நிலையான அரசியல் எப்படி இருக்க வேண்டுமென்று முதன் முதலாகச் சிந்தித்தவன் நிக்கோலோ மாக்கியவெல்லிதான்.

மாக்கியவெல்லி என்ற பெயரைக் கேட்டவுடன் அரசியல்வாதிகளும் முடிமன்னர்களும் பேய் பிசாசுகளைக் கண்டவர்களைப்போல் அரண்டு போனதுண்டு. மதகுருமார்கள்