பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

அடைந்தது. பீட்டடஸ், லீவியஸ் அவற்றை நினைவில் வைத்துக் காப்பாற்றியிருக்கிறார். அவற்றில் வெளிப்படையான விஷயங்களை விட்டு விட்டு அரசாங்கத்தின் குறிப்பிடத் தகுந்த உள்ளந்தரங்கமான நடவடிக்கைகளைப் பற்றி ஆராய்ந்து அவற்றின் பயனை எடுத்துக் காட்ட முயல்கிறேன்.

குடியரசு தோன்றிய கதை :

தோற்றத்திலேயே அன்னிய ஆதிக்கத்திற்கு உட்பட்ட நகரங்களைப் பற்றி இப்போது பேசப் போவதில்லை. தடியரசு அல்லது தலைமைத் தூய ஆதிக்கத்திற்கு உட்பட்டு சுதந்திரமாகத் தன்னுடைய சட்டங்களைக் கொண்டு தன்னை யாண்டு கொண்ட நகரங்களைப் பற்றி மட்டுமே பேசுவோம். ஒரே சட்டத்தின் மூலம் தேவையான நீதி முறைகள் அனைத்தையும் வழங்கக்கூடிய ஞானமுள்ள சட்டம் செய்பவனை ஆரம்பத்திலேயே பெற்ற நகரங்கள் அதிர்ஷ்டமுடையவை.

நெடுநாளைக்கு மாற்றப் படாமல் இருக்கக் கூடிய நிலைத்த சட்டங்களைப் பெற்ற நாடு இன்பபூமியாக இருக்கும். அப்படியில்லாமல் நீதி முறைகளை அடிக்கடி சீர்திருத்தவேண்டிய நிலையில் உள்ள நாடு, மிகுந்த துன்பத்தில் உழலும். நல்ல அரசியலமைப்பைப் பெறாத குடியரசு சரியான வளர்ச்சியும் நல்ல நிலைமையும் அற்றதாகும். முழுமையான அரசியலமைப்பை ஆரம்பகாலத்தில் பெறாதிருந்தாலும் கூட நல்ல அடிப்படையில் துலங்கிய குடியரசுகள் நாளடைவில் முன்னேற்றமடையக் கூடும். அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படவேண்டிய இன்றியமையாமையைத் தெளிவாக்கினால் அன்றிப் பெரும்பான்மையினர் இந்தச் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ள முன் வருவதில்லை. ஆகையால், இந்தச் சீர்திருத்தங்கள் ஆபத்தில்லாமல் நிறைவேறுவதில்லை. அரசியலமைப்பை பூரணத்துவப் படுத்தக்கூடிய இந்த ஆபத்தான முயற்சியில் அந்தக் குடியரசே எளிதாக அழிக்கப்பட்டுவிடவும் கூடும்.

சில அரசியல் நூலாசிரியர்கள் மூன்று விதமான அரசாங்கங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அவை, முடியாட்சி, மேன்மக்களாட்சி, பொதுக் குடியாட்சி என்பனவாகும். புத்திசாலிகள் என்று பெரும்பாலோரால் கருதப்படுகிற வேறு சில ஆசிரியர்கள், நல்ல அரசு மூன்று,