பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

கொண்டார்கள். கொடுங்கோன்மையின் தன்மைகளை நன்றாக நினைவில் வைத்துக் கொண்டு, கண்டிப்பான முறையில் அந்த ஆட்சியை நடத்தினார்கள். இந்த ஆட்சி நல்லெண்ணமுடைய மேன்மக்களால் நடத்தப் பெற்று வந்தது. நாளடைவில், ஆட்சித்தலைவர்களாயிருந்தவர்கள் பொது நலத்தை மறக்கத் தொடங்கிவிட்டார்கள். இவ்வாறாக மேன்மக்கள் ஆட்சி, தன்னலம் பிடித்த ஒருசிலராட்சியாக மாறியது. கொடுங்கோலாட்சியைப் போலவே இந்த ஆட்சியும் விளங்கவே வெறுப்படைந்த மக்கள், ஆளுவோரை எதிர்த்துப் போராடிப் பொதுக்குடியாட்சியை நிறுவினார்கள். மறுபடியும் ஒரு மன்னன் கையிலோ, ஒரு சில பேர்வழிகளின் கையிலோ ஆட்சி சிக்காத முறையில் பொதுக்குடியாட்சி மிகவும் எச்சரிக்கையாக நடத்தப்பட்டு வந்தது. ஆனால், மற்ற அரசுகளைப் போலவே இதுவும் நிலைத்து நீடிக்க வழியில்லாமல் போய்விட்டது. ஏனெனில் பொதுக் குடியாட்சியை நிறுவியவர்கள் தலைமுறை இருக்கும் வரை தான் அது ஒழுங்காக நடக்க முடிந்தது. அதற்குப் பிறகு அந்த ஆட்சியில், கட்டுப்பாடற்ற தன்மை மிகுந்து பொதுநலத்திற்கும் தனியார் நலத்திற்கும் கேடு விளைக்கும் படியாக ஆட்சியின் நிலைமை மாறிவிட்டது. இப்படிப்பட்ட குழப்படியான நிலையைக் காட்டிலும் ஓர் அரசன் ஆளுவதே சிறந்ததென்று தோன்றியது. இவ்வாறு மன்னன் ஆட்சி ஏற்பட்டு அது மீண்டும் கொடுங்கோலாட்சியாகியது. இப்படியே மாறி மாறி ஆறுவித ஆட்சி முறைகளும் வட்டமிட்டுக் கொண்டு வரலாயின.

நான் எல்லா அரசாங்கங்களும் குறைபாடுள்ளன என்று கூறுகிறேன். ஏனெனில் நல்லன என்று நாம் கூறிய அந்த மூன்று ஆட்சிகளும் குறுகிய கால அளவே நிலைத்து நிற்கக் கூடியன; தீய ஆட்சிகளோ, வெளிப்படையாகவே தீமை பயப்பன.

இந்த ஆட்சி முறைகள் ஒவ்வொன்றிலும் உள்ள தீமைகளை நன்குணர்ந்து எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஓர் ஒப்பற்ற அரசாங்கத்தைக் கூர்மையான அறிவுள்ள சட்டஞ் செய்பவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் ஸ்பார்டா அரசாங்கத்தை ஏற்படுத்திய லைக்கர்கஸ் பெரும் பாராட்டுக்குரியவன். அரசனுக்கும், பிரபுக்களுக்கும் குடிமக்களுக்கும் அவரவருக்குரிய