பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

இவ்வகையில்தான் ரோமாபுரி அதிர்ஷ்டவசமாக நிலைத்த அரசாங்கத்தைப் பெற்றது என்று கூறினோம்.

குடியரசு மேலும் வலுப்பட்ட விதம் :

ஓர் அரசை ஏற்படுத்தி அதற்குரிய நீதி முறைகளை வகுக்க விரும்புகின்ற எவரும், எல்லா மனிதர்களும் தீயவர்கள் என்றும், அவர்கள் சமயம் வாய்க்கும் போது தங்கள் தீயகுணத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கக் கூடியவர்கள் என்றும் மனத்தில் கொள்ளவேண்டும். மனிதர்களுடைய தீய குணங்கள் சிலகாலம் மறைந்திருக்கிறதென்றால், அதற்கு ஏதாவது விவரந் தெரியாத காரண மிருக்க வேண்டும். அது வெளிப்படுவதற்குச் சரியான சமயம் நேரவில்லை என்று நாம் எண்ணிக்கொள்ள வேண்டும். ஆனால், உண்மையின் தலைவன் என்று சொல்லப்படுகின்ற காலம், அவர்களுடைய தீய குணத்தை வெளிப்படுத்தாமல் விட்டு விடுவதில்லை. இந்தக் கருத்தைத்தான் பொது அமைப்புக்களைப் பற்றி எழுதுகின்றவர்கள் பலர் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இந்தக் கருத்தை வலியுறுத்தும் எடுத்துக்காட்டுக்கள் சரித்திரத்தில் நிறைய இருக்கின்றன.

தார்க்குவின்களை வெளியேற்றிய பிறகு ரோமாபுரியில் பிரபுக்களுக்கும் குடிமக்களுக்கும் இடையே அதிக ஒற்றுமை நிலவியது. தார்க்குவின்கள் இறந்த பிறகு பிரபுக்கள் அமைத்த ஆட்சி அதே மாதிரியான ஒழுங்கீனமுடையதாயிருந்தது. அதனால் ஏற்பட்ட பல தொந்தரவுகள், கஷ்டங்கள், ஆபத்துக்களின் காரணமாகத்தான் மக்கள் பிரதிநிதிகள் ஏற்பட்டார்கள். இந்த மக்கள் பிரதிநிதிகள் குடிமக்களுக்கும் ஆட்சிக் குழுவினருக்கும் இடையில் ஆற்றல் மிகுந்த ஒரு தடைச்சுவராக இருந்தார்கள். ஆட்சிக்குழுவினரின் இறுமாப்புக்குச் சரியான அணைபோட்டார்கள் இவர்கள்.

ரோமானியக் குடியரசு உரிமையும் வலிமையும் பெற்ற விதம்:

தார்க்குவின்கள் இறந்ததிலிருந்து மக்கள் பிரதிநிதிகள் உண்டாக்கப்பட்டது வரையுள்ள இடைக்காலத்தில் ரோமர்களின் குடியரசு குழப்ப நிலையும் ஒழுங்கீனமும் என்று சொல்பவர்களுடைய கருத்தை நான் மறுத்துக்