பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

பெரும்பாலும் எல்லா மனிதர்களும் மாயமான நல்ல தன்மையையும் மாயமான கீர்த்தியையும் கண்டு ஏமாந்து அறியாமையுற்று அவமதிப்புக்குரியவற்றைப் போற்றிப் புகழத் தாமாகவே முன்வந்து விடுகிறார்கள்.

பரம்பரை வாரிசுரிமைப்படி ஆட்சிக்கு வந்த மன்னர்கள் அனைவருமே, ஒருவரிருவரைத் தவிரக் கெட்டவர்களாகவே யிருந்திருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சக்கரவர்த்திகள் எல்லாருமே நல்லவர்களாகவேயிருந்திருக்கிறார்கள். பரம்பரை வாரிசுரிமை ஆட்சிக்கு ஆட்பட்ட தேசங்கள், சாம்ராஜ்யங்கள் அழிந்தே போயிருக்கின்றன.

நல்ல பேரரசர்களின் ஆட்சிக் காலத்திலே இருந்த மன்னன் மக்களிடையிலே தானும் பாதுகாப்பாக இருப்பான். ஏனெனில், மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள். உலகில் நீதியும் சமாதானமும் நிலைத்திருக்கும். ஆட்சிக் குழுவினருக்கு மதிப்பும், நீதிபதிகளுக்கு மரியாதையும் கிடைக்கும், பணக்காரர்களும் தங்கள் செல்வங்களை அனுபவித்துக் கொண்டு சுகபோகங்களில் இன்பமாக இருப்பார்கள். எங்கும் இன்பமும் வளமும் நிறைந்திருக்கும். நல்ல பேரரசர்களின் ஆட்சி பொற்காலமாயிருக்கும். குடிமக்கள் பாதுகாப்பாகவும் இன்பமாகவும் இருப்பதால், தங்கள் அரசனிடம் அன்பும், மதிப்பும், மரியாதையும் உடையவர்களாயிருப்பார்கள். ஆனால், தீய மாமன்னர்களின் ஆட்சியிலோ, குழப்பமும், கலகமும், பகைமையும் குரோதமும் தாண்டவமாடக் காணலாம். ஓர் அரசன் உலகத்தின் நல்லெண்ணத்திற்கும், கீர்த்திக்கும் பாத்திரனாக வேண்டுமென்றால், நிலை குலைந்த ஒரு நகரத்துக்கோ நாட்டுக்கோ அவன் அதிபதியாயிருக்க வேண்டும். அதை அவன் முழுதும் அழிக்கக் கூடாது. திரும்பவும் நல்ல நிலைக்குக் கொண்டுவரப் பாடுபட வேண்டும். ஓர் அரசன் கீர்த்தியடைய இதைக் காட்டிலும் அருமையான சந்தர்ப்பத்தை ஆண்டவன் கூடக் கொடுக்க முடியாது.

மதமும் அரசியலும்:

ரோமானிய சரித்திரத்தை ஊன்றிப் படித்தால் படைகளை நடத்துவதற்கும், மக்களை நல்லொழுக்கமுள்ளவர்களாக வைத்திருப்பதற்கும் மதம் எவ்வளவு தூரம் உதவி புரிந்திருக்கிறது என்பது தெரியவரும். மதம் இருக்கக் கூடிய தேசத்திலே தான் இராணுவமும் ஒழுங்கும்