பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

ரோமானியர்கள் தங்கள் படை பட்டாளங்களை இத்தாலியின் எல்லைவரைக்கும் அதற்கப்பாலும் கூட அனுப்பிவைத்தார்கள். ஆனால், பகைவரிடமிருந்து பெற்ற நிலங்கள் தங்கள் கண்ணுக்கெட்டாத தூரத்தில், ரோமில் இருந்து வெகுதொலைவில் இருந்தன. எளிதாக விவசாயம் செய்யக்கூடாத நிலையில் இருந்த அவை பெரிதும் விரும்பப்படாதனவாகப் போயின. பகைவர்களை அந்தப் பிரதேசங்களிலிருந்து விரட்டியடித்தபின், புதுக் குடியேறிகளை அங்கு அனுப்பினர். இப்படிப்பட்ட நிலையில் நிலவரம்புச் சட்டம் நெடுநாள் வரையில் தூங்கிக் கொண்டிருந்தது.

ஆனால் கிராச்சி என்பவன் காலத்தில் அவன் அந்தச் சட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுத்தான். இதனால் ரோமானியக் குடியரசு அடியோடு அழிய நேர்ந்தது. ஏனெனில் இதற்கிடையில் நீதி முறைக்கு எதிரியானவர்களின் தொகை இரட்டிப்பாகியிருந்தது. நிலவரம்புச் சட்டம் உயிர்ப்பிக்கப் பட்ட செயல், ஆட்சிக் குழுவிற்கும் மக்களுக்கும் இடையே மனக்கசப்பை வளர்த்தது. இந்த வெறுப்பு கட்டுப்பாடற்ற கொடுமையான இரத்தப் போராட்டத்தில் வந்து முற்றியது.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், பெரும்பாலான மக்கள் கௌரவத்தைக் காட்டிலும் தங்கள் சொத்துக்களையே பெரிதாக மதிக்கிறார்கள் என்பது தான். ரோமானியப் பிரபுக்கள் தங்கள், அதிகாரத்தையும், மரியாதையையும் மக்களுக்கு விட்டுக் கொடுக்க அதிகமான வருத்தமடையவில்லை. ஆனால், சொத்துப் பிரச்சனை வந்த மாத்திரத்தில் அசையாத பிடிவாத குணத்தோடு அதை எதிர்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

அரசு நடத்த மனவுறுதி வேண்டும்:

ரோமாபுரியில் கொள்ளை நோய் பரவியிருந்த சமயத்தில், அதைத் தாக்குவதற்கு இதுதான் தக்க சமயமென்று எண்ணிய வோல்சியர்களும், ஈக்குவேனியர்களும் பெரும்படை திரட்டிக் கொண்டு, ரோமாபுரி ராஜ்யத்தைச் சேர்ந்த லத்தின்காரர்களையும் ஹெர்னீசியர்களையும் கொன்று கொள்ளையிட ஆரம்பித்தார்கள். அவர்கள் ரோமானியர்களைத் தங்கள் உதவிக்கு வரும்படிக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், கொள்ளை நோய்க்கு