பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

இருந்ததும் அவர்களுடைய இந்த ஆசைக்குச் சரியான தூண்டுகோலாயின. இது. பயனற்ற வேலையாகவும், ஆபத்து நிறைந்ததாகவும், விவேகிகளான ஆட்சிக் குழுவினருக்கு நன்றாகப் புலப்பட்டது. செத்தாலும் இந்தக் காரியத்திற்கு அனுமதி கொடுக்க முடியாதென்று அவர்கள் தெரிவித்தார்கள். இந்த விஷயம் விவாதிக்கப்பட்ட போது, மக்கள் ஆட்சிக் குழுவினரின் மீது பெருங்கோபம் கொண்டார்கள். ஆட்சிக் குழுவினர் மட்டும், மிக மேலானவர்களாக மதிக்கப்பட்ட வயது முதிர்ந்த சில பெருமக்களின் பின்னால் சென்று மறைந்து கொள்ளாமல் இருந்திருந்தால், குத்துப்பழி வெட்டுப்பழி நிகழ்ந்திருக்கும்; இரத்தம் சிந்தப்பட்டிருக்கும்.

இதிலிருந்து நாம் இரண்டு விஷயங்களையறிந்து கொள்ளுகின்றோம். மக்கள் பொதுவாக ஒரு கற்பிதமான நன்மையை நம்பி ஏமாந்து தங்கள் அழிவைத் தாங்களாகவே தேடிக் கொள்ளுகிறார்கள் என்பது ஒன்று. அவர்களுக்கு நம்பிக்கையான சிலர் எது நல்லது எது கெட்டது என்று விளக்கிக்கொள்ளாமல் மட்டும் இருந்துவிட்டால், அவர்கள் குடியரசையே குட்டிச்சுவராக அடித்து விடுவார்கள். மக்களுக்கு நம்பிக்கையானவர்கள் யாருமே இல்லாவிட்டால், ஏற்கனவே சில நிகழ்ச்சிகளால் அல்லது சில மனிதர்களால் ஏமாற்றப்பட்ட அவர்கள், நிச்சயமாக ராஜ்யத்தை அழிவு நோக்கி நடத்திச் செல்வார்கள்.

வெளிப்படைக்குப் பயனுள்ளதாகவும் தைரியமளிப்பதாகவும் உள்ள எந்த வழியிலும் அவை உள்ளந்தரங்கமாக மிகுந்த நஷ்டமும் அழிவும் விளைப்பனவாக இருந்தாலும் மக்களைச் செலுத்துவது எளிது. ஆனால், அந்த வழி ஆரம்பத்திலேயே சந்தேகத்திற்கிடமளிப்பதாயிருந்தாலும், நஷ்டமடையச் செய்யக் கூடியதாகத் தோன்றினாலும், அதன் அடித்தளத்தில் குடியரசுக்கு நன்மையும் லாபமும் மறைந்திருந்தாலும் மக்களை அந்த வழிக்குத் திருப்புவது முடியாத காரியம். மக்கள் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் வெளிப்படைத் தோற்றங்களுக்கே பெரிதும் மதிப்பளிப்பவர்கள்.

உடன்படிக்கைகள் :

குடியரசுகளும், அரசர்களும் தத்தமக்கிடையே ஒப்பந்தங்கள் செய்து கொள்வதும் அல்லது குடியரசு ஒன்றும்