பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

ஓர் அரசனும் தமக்கிடையே ஒப்பந்தம் செய்து கொள்வதும் நாள் தோறும் நடைபெறுவதைக் காண்கிறோம். ஒரு குடியரசு நிலையான நம்பிக்கைக்குரியதா அல்லது ஓர் அரசன் நம்பிக்கைக்குரியவனா என்பதை ஆராய்ந்து பார்ப்பது நல்லதென்று எண்ணுகிறேன். பல சந்தர்ப்பங்களில் இரு பக்கமும் சரிசமமாகவே இருக்கின்றன. ஆனால் வேறு சில சந்தர்ப்பங்களில் வித்தியாசம் இல்லாமல் இல்லை. ஆக்கிரமிப்பின் காரணமாக ஏற்பட்ட ஒப்பந்தங்கள் அரசனாலும் கடைப்பிடிக்கப் படுவதில்லை. தங்கள் ராஜ்யத்தை இழக்கக் கூடிய எந்தத் தரப்பாரும் அதைக் காப்பாற்றுவதற்காகத் தங்கள் உறுதியை மீறி நன்றி கெட்டதனமாகவும் குறை கூறத் தகுந்த முறையிலும் நடந்து கொள்ளுவார்கள். அச்சமுற்ற நிலையில் உள்ள எந்தத் தரப்பினரும் நம்பிக்கைக்கு அருகதையற்றவராகவே யிருப்பார்கள். இந்த விஷயங்களையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்கும் போது, பயங்கரமான கட்டங்களில் ஓர் அரசனைக் காட்டிலும் குடியரசிலேயே நிலையான தன்மை மிகுதியாகக் காணப்படும் என்று நினைக்கிறேன். அரசர்களைப் போலவே ஒரே மாதிரியான உணர்ச்சிகளும், நோக்கங்களும், குடியரசுகளுக்கும் உண்டாகுமானாலும், அவற்றின் நடைமுறைகள் மிக மெதுவாக நடப்பதாலும் எதற்கும் தீர்மானம் போட்டு வேலை செய்ய வேண்டியிருப்பதால் அதிகக் காலம் பிடிக்குமாதலாலும் அவை நம்பிக்கை தவறி நடப்பது கிடையாது.

பலாபலன்களைக் கருதிப் பல நேச உடன்படிக்கைகள் உடைபட்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் அரசர்களைக் காட்டிலும், உடன்படிக்கைகளின்படி நடப்பதில் குடியரசுகள் மிகக் கவனம் காட்டி வருகின்றன. அரசர்கள் மிகச் சாதாரணமான ஒரு பலனை முன்னிட்டுக் கூட ஒப்பந்தங்களை மீறத் துணிந்து விடுவார்கள். குடியரசுகளோ பெரும்பலன் கிடைத்த போதிலும் கூட உடன்படிக்கைகளை மீறத் தவறி விடுகின்றன. குடியரசுகள் எவ்வளவு பலன் கிடைத்தாலும் தங்கள் கண்ணியத்தை இழக்கத் துணிவதில்லை.

ஆள்வோரிடம் தாழ்வு மனப்பான்மை கூடாது :

தாழ்வு மனப்பான்மை என்பது பயனற்றது என்பது மட்டுமல்ல; உண்மையில் துன்பந் தருவதுமாகும். அதுவும், பொறாமையினாலோ வேறு காரணங்களினாலோ நம்மீது