பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

வெறுப்புடைய தலைக்கனம் பிடித்தவர்களிடம் தாழ்ந்து போவதென்பது பெருந் துன்பந்தருவதாகும். இதற்குச் சரித்திராசிரியர்கள் பல சான்றுகளைக் காட்டுகின்றார்கள்.

லத்தீன்காரர்கள் தங்களைத் தாக்குவதாக கான்மைட்டுகள் ரோமானியரிடம் முறையிட்ட போது. லத்தீன்காரர்களுக்கு எரிச்சலூட்ட விரும்பாத ரோமானியர்கள், தொடர்ந்து போரிடுவதை நிறுத்தும்படி சொல்லித் தாழ்ந்து போனார்கள். இந்த நடவடிக்கை, அவர்கள் விரும்பியபடி லத்தீன்காரர்களுக்கு எரிச்சலூட்டவில்லை என்பதோடு, அவர்களை நேரடியாக ரோமானியரோடு பகைமை பாராட்டக் கூடிய தைரியத்தையும் அளித்தது. ரோமானியர்கள் தெள்ளத் தெளிவாக இப்படித் தாழ்ந்து போனதுதான் லத்தீன்காரர்களின் இறுமாப்பை அதிகரிக்கச் செய்தது. ஆகவே எந்த அரசனும் தன் அந்தஸ்தை இழக்கும்படியான காரியம் எதையும் செய்யக்கூடாது. அந்தஸ்தை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் ஒழிய, தன்னிச்சையாகக் கூட எதையும் விட்டுக்கொடுக்க முன் வரக்கூடாது. விட்டுக்கொடுக்க நேர்ந்தாலும் பலாத்காரத்தின் பேரில் விட்டுக் கொடுக்கலாமே தவிர பலாத்காரத்திற்கு அஞ்சி விட்டுக் கொடுக்கவே கூடாது. அவன் போரைத் தவிர்ப்பதற்காக - அச்சத்தின் காரணமாகத் தாழ்ந்து போவானேயானால், அந்தப் போரிலிருந்து தப்புவான் என்பது அரிதே! கோழைத்தனமுடையவனிடம் இருந்து ஒன்றைப் பெற்றவன், அத்துடன் திருப்தியடையப் போவதில்லை. அரசனிடம் அவன் வைத்திருந்த மதிப்புக் குறையக் குறைய எதிரியின் அகந்தை ஓங்கிக் கொண்டு போகும். மேலும், அரசன் தளர்ந்தவனாகவோ கோழையாகவோ காணப்பட்டால் உடனிருக்கும் அவன் நண்பர்களின் உற்சாகமும் குறைந்து போகும். ஆனால், தன் படை சிறிதாயினும் பகையை எதிர்த்துப்போராடத் துணிச்சலுடன் கிளம்புகிற அரசனுக்குப் பகைவனும் மதிப்பும் மரியாதையும் காட்டுவான். அக்கம் பக்கத்து அரசர்களும் அவன் வீரத்தைப் பாராட்டி அவனுக்கு ஒத்தாசைக்கு வர முற்படுவார்கள்.

ஒரே ஒரு பகைவன் எதிர்க்கும்போது மட்டும் தான் மேற்கூறிய கருத்தைக் கைக்கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பல பகைவர்கள் சூழ்ந்தெதிர்க்க முனைகிற