பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தவத்திரு அடிகளார்839. “கிராமப்புற மக்கள், நகர மக்களால் சுரண்டப்படுகின்றனர்.”

840. “ஒரு காரியத்தைச் செய்யும்பொழுது எதிர் விளைவுகள் வராது பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும்.”

841. “இந்தியாவிற்கு உடனடியான தேவை, கூட்டுறவு முயற்சிகள்.”

842. “பொதுவுடைமைச் சமுதாயத்திற்குத் தாய் கூட்டுறவுச் சமுதாயமே.”

843. “இந்தியாவில் ஏழைகள் மேலும் ஏழைகளாகிக் கொண்டிருக்கின்றனர்.”

844. “விஞ்ஞானத்தின் தாய் ஞானமே.”

845. “விஞ்ஞானம் கிராமப்புற வீதிகளில் பேசப்படும் பொருளாக வரும் பொழுதே நாட்டு மக்களிடத்தில் பகுத்தறிவு வளரும்.”

846. “விஞ்ஞானத்தின் வழியில் வாழ்வதே மானுட வாழ்வின் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வழி.”

847. “அறிவியலும் அருளியலும் இணைந்தாலே மானுடன் உய்யும்.”

848. “இராமன், அனுமானைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், இலக்குவனால் முடியவில்லை. இதுதான் தலைமையின் சிறப்பு.”

849. முன்னேற்றத்தின் படிகட்டுகள் உழைப்பே.”

850. “முறையாக உழைப்போர் எவரும் உயரலாம்.”