பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

தவத்திரு அடிகளார்932. “அழிவு - கழிவு உலகத்தியற்கையன்று. எதையும் படைப்பாற்றல் உடையதாக்கலாம்.”

933. “நம்மைச் சுற்றியுள்ள உற்பத்தி சாதனங்களை முழுமையாகப் பயன்படுத்தும் பாங்கு வந்து விட்டாலே வளம் கொழிக்கும்.”

934. “அகத்தின் வறுமையே புறத்து வறுமையைப் படைக்கின்றது.”

935. “தேர்தலில் வெற்றி பெறுவதையே நோக்கமாக உடைய அரசியல்வாதிகள் நாட்டை உயர்த்த மாட்டார்கள்,”

936. “சலுகைகள் சமுதாயத்தை வளர்க்கும் சக்தியாகா.”

937. “தமிழினம், என்றும் ஒருமைப்பட்டல்லை.”

938. “உடன்பிறப்பு, இரத்தத்தின் இரத்தம் ஆகிய சொற்களை நிகழ்வுகள் பொருளற்றதாக்கி விட்டன.”

939. “ஒழுங்குகள் நலம் பயப்பனவேயன்றித் துன்பம் தருவன அல்ல.”

940. “விதி விலக்குகள் வினை விளைக்கலன்களேயாம்.”

941. “பிறர் வருந்த வாழ்தல் அறமாகாது.”

942. “கீழான மனிதர்களைக்கூட அங்கீகாரம் அளிப்பதன் மூலம் திருத்தலாம்.”

943. “படித்தவர்களின் பண்பாட்டால் பார் முழுவதும் திருந்திவிடும்.”