பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

103944. “மனிதனுக்கு இயற்கை வழங்கிய முதல் மூலப்பொருள் காலமேயாம். முதல் உற்பத்திக் கருவி உடலேயாம்.”

945. “இன்று தீய பழக்கங்கள் மூச்சுக் காற்றாகி விட்டன.”

946. “செயல்கள் பயன்தரா. செயல்களுக்குரிய நோக்கங்களே பயன்தரும்.”

947. “உணர்ச்சிகள் நீரிற்குமிழி; உணர்வுகள் அலைகள்; ஆர்வம் ஊற்று.”

948. “மனிதனின் முதல் நண்பன் சுறுசுறுப்பே.”

949. “ஒன்றுமே செய்யாதவனை விட, பயனற்ற வைகளைச் செய்பவன் பரவாயில்லை.”

950. “சமூகத்திடம் போகாதே; போனபிறகு தயங்காதே”

951. “உன்னிடம் மற்றவர்களைப் பற்றி குறை கூறுகிறவர்களிடம் விழிப்பாயிரு. இடம் கொடுக்காதே.”

952. “செல்வத்தைச் செலவழித்த வகையும், அளவும், உடனுக்குடன் பார்ப்பது வீண் செலவைத் தவிர்க்கவும், செல்வத்தைச் சேர்க்கவும், துணை செய்யும்.”

953. “பொருளுற்பத்திக் குணம் வளர்ந்தாலே வையகம் வளரும்; வாழும்.”

954. “உடல் தேவையை ஈடு செய்யும் வாயும் வயிறும் உலகமெங்கும் ஒரே நிலையினவாக அமைந்திருப்பதே சோசலிச சமுதாய அமைப்பின் நியாயத்தினை வலியுறுத்துகிறது.”