பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தவத்திரு அடிகளார்1131. “சொன்னதைச் சொன்னபடி நிறைவேற்று பவர்களே உழைப்பாளிகள்.”

1132. ஒழுங்குமுறை ஆக்கத்திற்கு அடிப்படை.”

1133. “பிரசவ வேதனை இல்லாமல் தாய் இல்லை. அதுபோல துன்பப்பாடு இல்லாமல் இன்பம் இல்லை.”

1134. பெரிய வேலைகள் நடைபெறத் தடையாயிருப்பவை, சின்ன சின்ன வேலைகள் முறையாகச் செய்யப் பெறாமையே!”

1135. தாயிடம் அன்பு பாராட்டுவதே ஒரு கலை தான்.”

1136. “கொள்கைப் பிடிவாதம் வாழ்க்கையை வறட்சித் தன்மையுடையதாக்கிவிடும்.”

1137. “இல்லாமையால் உலகு அடையும் துன்பத்தை விட ஆசையால் படும் துன்பமே மிகுதி.”

1138. “உயிருடன் கொண்டு செல்லும் அறிவு, பண்புகளில் உள்ள ஆர்வத்தைவிட உடற்சார்பான ஆசைகளே உலகத்தை ஆட்டிப்படைக்கின்றன.”

1139. வேலையில் ஈடுபாடு, குறிக்கோள் இருந்தாலே வரும்.”

1140. ஒரு காலத்தில் நன்மையாகக் கருதப் பெறுவது நிலைத்த நன்மையாகி விடுவதில்லை.”

1141. “எனக்கு நண்பராக இருந்தால் போதாது. எனது பகைவருக்கு விரோதியாகவும் இருத்தல் வேண்டும் என்று எதிர்பார்ப்பது விரும்பத்தக்க தல்ல.”

1142. “உணர்ச்சி நிறைந்த வேகத்தில் இருக்கும் பொழுது அறநெறி உபதேசம் பயன்படாது. அந்த