பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

121


நிலையில் மருந்தென உணர்ச்சிக்கு இரை போடுதல் பயன்தரும். ஆனால் ஆபத்தான பரிசோதனை.”

1143. “உடற்பயிற்சி காரணமாகவே பலர் வேலை செய்ய நினைக்கின்றனர். இவர்களுக்கு உழைப்பு நோக்கம் அல்ல.”

1144. “எதையும் பின் தொடர்ச்சியாகக் கவனிக்கத் தவறினால் கெடும்.”

1145. “நிறுவனங்கள், இயக்கநிலை எய்துதல் வேண்டும்.”

1146. “உடல் ஓயாது இயங்குகிறது. அதுபோல வாழ்க்கை ஓயாது இயங்குதல் வேண்டும்.”

1147. இயற்கை அமைத்துத் தரும் கனிகளிலும் மனிதன் சமைக்கும் உணவு நல்லன அல்ல.”

1148. “உண்மையாக நடத்தல் என்பது அகமும் புறமும் ஒத்து நடத்தல் என்பதே!”

1149. “இந்திய சமூகப் பிரிவினைகள், தீமைகள் நீங்கியே யாகவேண்டும்.”

1150. “குறிக்கோளை அடையும் வாழ்க்கைக்குத் துன்பத்தைத் துணையாகக் கொள்ளும் துணிவு தேவை.”

1151. “நமது மக்களாட்சிமுறை மனு எழுதும் பழக்கத்தையே கற்றுத் தந்துள்ளது.”

1152. “உளம் நிறை ஈடுபாடே உழைப்புக்கு ஊற்று.”

1153. “கார்ல் மார்க்ஸ் மதத்தை எதிர்க்கும் பொழுது, அந்த இடத்தில் ஒரு புதிய மதத்தை