பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

1511477. “விலங்குகள், தனக்கு உணவுக் கிடைத்து விட்டால் அமைதி கொண்டுவிடும்; மற்ற விலங்குகளைப் பற்றிக் கவலைப்படாது இந்த நிலைக்கு இன்று மனிதர்களும் வந்துவிட்டார்கள்.”

1478. “சமநிலை இல்லாத சமுதாயத்தில் சண் நாயக தத்துவம் வெற்றி பெறாது.”

1479. “செய்பணிகளில் போராட்ட உணர்வு இல்லையெனில் வாழ்க்கை எளிதில் வெற்றியைத் தழுவாது.”

1480. “இந்திய சமூக வாழ்க்கையில் முதுமை, போற்றப்பட்டதுண்டு. இன்று இல்லை.”

1481. “பண்டித ஜவஹாலால் நேரு அவர்களின் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சி அறிவியல் சார்புடையது; சுதந்தரத் தன்மையுடையது.”

1482. “இன்று காலிஸ்தான் சிக்கலுக்குக் காரணம் பஞ்சாபை, பஞ்சாப், ஹாரியானா என்று பிரித்ததேயாம்.”

1483. “தற்காலிக வெற்றிகளுக்காக தீய சக்திகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் தவறு. பின் விளைவுகள் தீமையையே தரும்.”

1484. “காலில் முள் தைத்துவிட்டது என்று கேட்கும் நிலைக்கு இன்றைய சமூகம் வந்து விட்டது.”

1485. “காதல் வாழ்க்கையில் பெண்ணுக்குப் பேருழைப்பு: பெருஞ்சுமை! உழைப்பு வாழ்க்கையிலும் அப்படியே! இது நியாயமற்ற தன்மை!”

1486. “கடைவீதியில் நல்ல தூய்மையான” சத்துள்ள உணவு நியாய விலைக்குக் கிடைத்தால்