பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

1571539. “செல்வத்தை செலவழித்தலைவிட - செல்வாக்கை செலவழிப்பதில் கவனமும்-சிக்கனமும் தேவை.”

1540. “மனம்போன போக்கில் நிர்வாக இயந்திரத்தை இயக்கினால் விபத்துக்கள் தவிர்க்க இயலாதன வாகிவிடும்.”

1541. “சிலர் சில காரியத்தை காரியமாகக் கருதிச் செய்வதில்லை. விளம்பரத்துக்காகவே செய்கின்றனர்.”

1542. “ஆற்றொழுக்குப் போல-பழக்கங்களை நடைமுறைப் படுத்தினால் மக்கள் தெளிவடைவர்.”

1543. “லாபநோக்கும் மனித உலகத்தை மிருக மாக்கி விட்டது.”

1544. “செய்ய வேண்டிய வேலைகள் கண்ணுக்கு எதிரே இல்லை தேடிப் பிடித்துே செய்யவேண்டும்.”

1545. “உடல்-உயிரைப் புத்திரமாக வைத்திருப்பதுபோல கடமைகளைப் பத்திரமாக-கவனமாக செய்பவர்கள் நல்ல பணியாளர்கள்.”

1546. “பழக்கமாகிவிட வேண்டியவை கூட புதியனவாக இருப்பதின் காரணம் ஈடுபாடின்மையே”

1547. “இன்றைய மனிதனை தோலுரித்துப் பார்த்தால் ஒரு அசல் காட்டு மிருகமாகவே காட்சி அளிப்பான்.”

1548. “தலைமை” என்பது இன்றைய வரலாற்றில் தகுதியற்றது என்ற பொருள் பயக்கும் சொல்லாக உருமாறியுள்ள நிலை ஒர்ந்து உணரத்தக்கது”

1549. “வழிகாட்டுதலும்-வழிநடத்துதலும் தான் தலைமைக்குரியப் பண்புகள்.”