பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

7



35. “சாதாரண விதிமுறைகளைக்கூட, கடைப் பிடித்தொழுகுவதில் இடர்ப்படுவோர் ஏராளம்”.

36. “காரணங்களும் பயன்களும் இல்லாமலே கூட, தவறுகள் செய்பவர்கள் உள்ளனர்”.

37. “முறையாகச் செய்யப் பெறாத மருத்துவம் நோயை விடக் கொடியது”.

38. “தீவிர பற்றுக்கள் ஆய்வு மனப்பான்மையைத் தருவதில்லை”.

39. “பலரோடு கூடி வாழ்வது தொல்லையே! ஆனாலும் பண்பாட்டுப் பயிற்சிக்கு இதைவிட வேறு வழியும் இல்லை”.

40. “பழகிப் புதுக்கிக் கொள்ளப் பெறாத உறவுகள், பறிபோகும்”.

41. “தற்சார்பான பழக்கங்கள், பெரும்பாலும் கிழமை, காலம் தவறுவதில்லை. கடமைகள் மட்டுமே காலந் தவறுகின்றன”.

42. “காலந் தவறுதலை ஒழுக்கக்கேடு என்று உணராதவரை சமூகம் வளராது!”

43. “காலத் தவறிச் செய்யப் பெறும் பணிகள் பொருள் இழப்பைத் தரும்”.

44. “பெரும்பான்மை” என்ற எண்ணம் ஒரு வகையான தடிப்புணர்ச்சியையும் சிறுபான்மை என்ற எண்ணம் தாழ்வுணர்ச்சியையும் தருகிறது”.

45. “பசி என்பது கடமையைச் செய்து வயிற்றின் அடுத்த பணிக்கேட்பின் செயற்பாடு”.