பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தவத்திரு அடிகளார்


குற்றம் செய்யவில்லை என்ற கருத்தை உருவாக்காது.”

1573. “வளர்ச்சியடையாதவர்கள் தான் வைத்த அதிகாரத்தில் மூழ்கிவிடுவர்.”

1574. “கழிவுப் பொருள்கள் பலநூறு பொருள் மதிப்புடையன.”

1575. “வேலை செய்யத் தெரிந்தவர்கள் வேலைக்காரர்களாகி விடுவதில்லை. வேலையைப் பயனுறச் செய்வதின் மூலமேயாம்.”

1576. “ஒன்றைப் பொறுப்புணர்வுடன் ஈடுபாட்டுணர்வுடனும் வாங்கிக் கொள்பவர் பலரின் அன்பைப் பெறுவர்.”

1577. “தீயவர்கள் சுறுசுறுப்பாகவும் புத்திசாலிகளாகவும் இருப்பர். இவர்களை முயன்று மாற்றிவிட்டால் பயன்படுவர்.”

1578. “காரணம், காரியங்களைக் கடந்ததே உண்மையான அன்பு.”

1579. “அன்பு காட்டுதல் என்பது இயல்பான உயிர்க்கு குணமாகிவிடவேண்டும்.”

1580. “உழைத்தல் என்பதும் இயல்பான உயிர்க் குணமானாலே வாழ இயலும்”.

1581. “எந்த ஒரு நன்மையும் கூட திணித்தால் மனிதர்கள் ஏற்கமாட்டார்கள்.”

1582. “ஒருவர் தன்னுடைய செயலின்மை கருதி நொந்துகொள்ளாமல் சுட்டிக் காட்டுபவர்மீது வேதனையைக் காட்டுதல் திருந்தமாட்டேன். என்பதற்கு அடையாளம்.”