பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

தவத்திரு அடிகளார்


46. “வயிறு சோஷலிசத்தின் சின்னம். வயிற்றுக்கு இடப்பட்ட சோற்றின் பயன், உடம்பின் அனைத்து உறுப்புக்களுக்கும் கிடைக்கிறது.”

47. “சாதி வெறியர்கள், சுரண்டி வாழ்வோர் ஆகியோரிடமிருந்து கடவுளை, மதத்தைக் காப்பாற்ற வேண்டும்.”

48. “தகுதி, திறமை இவற்றை வளர்க்காமல் உரிமைகளையும் உடைமைகளையும் வழங்குதல் பயனன்று.”

49. “ஒருமைப்பாடு, மனித நேய அடிப்படையில் மட்டுமே உருவாகும்!”

50. “சலுகைகள், உரிமைகளா?”

51. “ஒருமைப் பாட்டுக்கு நாடு, மொழி, சமயம் முதலியன காரணங்களாதல் இல்லை. இவை அனைத்தும் குறுகிய பற்றுக்களையே வளர்க்கும்.”

52. “கலியுகம்-கிருதயுகம்என்பன கற்பனைகள். மாற்றங்களை யுகம் பிரளயம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது.”

53. ”செலவழிக்காமல் சிக்கனமாக இருப்பது எல்லோருக்கும் இயலக் கூடிய ஒன்று. வருவாயைத் தேடுதல் அங்ஙனமன்று.”

54. எதிர்மறை அணுகல் நலம் தராது.

55. “செல்வந்தர்களும் மதக் குருக்களும் எப்போதும் கூட்டாளிகள்; உழைக்கும் வர்க்கத்தின் எதிரிகள்.”