பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

1711699. “பணம் பத்தும் செய்யும் என்பதை நிரூபணம் செய்வதே வரலாறு.”

1700. “இந்தியா ஒரு நாட்டு” உண்மையேயாயினும் இன்றிருப்பது போல் ஒரு நாடு அமைப்பு இருக்கக் கூடாது.”

         ஒரு நாடு
         ஒரே மாநிலம் ஆட்சி செய்கிறது;
         ஒரே மொழி ஆட்சி செய்கிறது;
         ஒரே மதம் ஆட்சி செய்கிறது.
         ஒரே குடும்பம் ஆட்சி செய்கிறது.

1701. “சாமார்த்தியம் வந்தமையும் அளவுக்கு வாய்மை வந்து பொருந்துவதில்லை.”

1702. “எந்த ஒரு பணியும் அடித்தள மக்களின் மேம்பாட்டுக்கு உதவாவிடில் அது பணியல்ல; ஒரு வகையான வணிகமேயாகும்.”

1703. “சுய விருப்பத்தால் செய்யப் பெறும் பணியே அறம் சார்ந்த பணி.”

1704. “உயர் குறிக்கோளுக்கு உரிமையாக்கிக் கொள்ளாதோர் - தட்டச்சு இயந்திரம் போலப் பணி செய்பவர். பயன் இராது.”

1705. “உயர் குறிக்கோள் இலாதார் சிறப்புறும் பணிகளை செய்யார்; அதே போழ்து பிழைகளும் செய்வர்.”

1706. “உள் வளர்ச்சியும் அதாவது ஆன்மாவும் வளர்ந்தால்தான் - கல்வி - கேள்வி பயனுறும்.”

1707. “ஒருவருடைய கண்கள் - காதுகள் அறிவார்ந்த நிலையில் சுமூக உணர்வில் இயங்கினாலேயே