பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

177


நமது நாட்டிலே வருவாய் துறையும் (ஆட்சி), காவல் துறையும் பன்மடங்கு வளர்ந்துள்ளது. போலீசு இராஜ்யம் போல் தெரிகிறது.”

1763. “பொதுமக்களுக்கு வேலைக்கும், அதற்கேற்ற கூலிக்குமே உத்தரவாதம் வேண்டும்; சோற்றுக்கும் துணிக்கும் அல்ல.”

1764. “முன்னேற முடியும், முன்னேறவேண்டும் என்ற உணர்வே ஏழை மக்களிடம் இல்லை! விதி பற்றிய நம்பிக்கை ஆழமாகப் பதிந்துள்ளது.”

1765. “நிர்வாகம் பெரியதாக வளர வளர அந்த அமைப்பில் உள்ளவர்களிடம் பொறுப்புணர்வு இல்லாது போனால் வளர்ச்சி பாதிக்கும். ஊதிய பலூன் போல வெடித்துவிடும்.”

1766. “எவ்வளவுதான் நெருக்கமான பழக்கம் இருந்தாலும் இடையில் பணம் புகுந்து விளையாடினால் மனிதர்கள் கெட்டுப் போவார்கள்.”

1767. “பணத்தாசையால் பண்பாடிழப்பவர்கள் பணம் காலியானபிறகு தேடுவாரின்றி அலைவார்கள்.”

1768. “எந்த ஒரு பணியையும் தொடக்க நிலையிலேயே எளிமையாகக் கருதிவிடாமல் கடுமையானதாகக் கருதி நிறைந்த முயற்சியை மேற்கொள்வது காரிய சாதனைக்கு வழி.”

1769. “கால உணர்வு நற்பழக்கங்களுக்கு எல்லாம் தாய்.”

1770. “ஒரு பெரிய நீளமான தேர்ச்சங்கிலியில்-இடையில் ஒரு கம்பி முறிந்தாலும் தேர்ச்சங்கிலி

த-12