பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

தவத்திரு அடிகளார்



1846. “முற்றாக நல்லவர்களும் இல்லை; முற்றாக கெட்டவர்களும் இல்லை.”

1847. “ஏவவும் செய்கலான்தான் தேறான் அவ்வுயிர்க்கு போஒம் அளவும் ஒர் நோய்” என்ற திருக்குறள், வாழ்வின் படிப்பினையில் பிறந்த திருக்குறள். இன்னும் இந்தக் குறளுக்கு இலக்கியமாகப் பலர் உளர்.”

1848. “தவறுகளை உணர்த்துகிற பொழுது, எதிர்ப்புணர்ச்சி காட்டுபவர் அல்லது பயப்படுகிறவர், யாதொரு உணர்ச்சியும் காட்டாது இருப்பவர் ஆகிய மூவகையினரும் திருந்துதல் அரிது. மாறாக வருந்து தலையும் உணர்தலையும் புலப்படுத்துகிறவர்கள் திருந்துவர்.”

1849. “எண்ணிக்கை கூடுதல் இருந்தாலும் பணி கெடும்.”

1850. “நாம் செய்யத் தவறுகின்ற காரியங்களால் எத்தகைய இழப்புக்கள், கேடுகள் வருகின்றன என்று உய்த்துனரும் அறிவு இருந்தால் செய்ய வேண்டியன எதையும் செய்யாது இருக்கமாட்டோம்.”

1851. “தவறு”, ‘தப்பு’ என்று குற்றங்களையும் செய்யாமையையும் சொல்லுதல் கூடாது.”

1852. “உடலிலிருந்து கழிவுகள் நீங்குவதில் ஏற்படும் சிக்கல் உடலைப் பிணிக்கு ஆளாக்கி விடுகிறது. அதுபோல, கெட்டப் பழக்கங்களிலிருந்து மீளத் தயங்குதல் பலவித இழப்புகளையும் இழிவுகளையும் கொண்டுவந்து சேர்க்கும்.”

1853. “சிறுநீர், உடல் இயக்கத்தில் கெட்டுப் போனதுதான். அதுபோல் கெட்டப் பழக்கங்கள் வாழ்க்கையில் தோன்றுபவைதாம். அவை நற்பழக்கங்