பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தவத்திரு அடிகளார்1879. “மக்கள் கூடித் தொழில் செய்யும் பொழுதெல்லாம் ஒன்றிரண்டு காவல்காரர்கள் அந்த இடத்தில் இருப்பது தவிர்க்க முடியாத தேவையாகி விட்டது.”

1880. “சாத”ி உணர்ச்சி சராசரி மனிதனிடம் கூட இடம் பெற்று வருகிறது.”

1881. “எந்த ஒரு பணிக்கும் திட்டமிடுதல் தவிர்க்க இயலாத தேவை.”

1882. “உழைப்பின் அடிப்படையில் ஊதியம் என்றால் பல அலுவலர்கள் பட்டினி கிடக்க வேண்டி வரும்.”

1883. “உழைத்தல், உழலுதல், என்ற சொற்களின் வழியில் பிறந்தது “உழைப்பு” என்ற சொல். அதாவது கடுமையான சோதனைகளைத் தாங்கி ஒரு பணியை முனைப்புடன் செய்து பயன் தரத்தக்க வகையில் முடித்தல் உழைப்பு ஆகும்.”

1884. “தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது வாக்குகள் எண்ணி அறிவித்தப் பிறகு, கேட்கப்பெறும் செய்தியை வைத்தே முடிவு செய்யவேண்டும். அது வரையில் கேட்பது எல்லாம் அவரவர்களுடைய ஆசையையேயாம்.”

1885. “கிராமப்புறங்களில் புஞ்சையில் பாதிக்கு மேல் தரிசு. அதனாலேயே கிழக்கு இராமநாதபுரம் வறுமை நிறைந்த பிரதேசமாகக் காட்சியளிக்கிறது,”

1886. “உள்ளீடு இல்லாத மனிதர்கள் முரட்டுத் தனமாக நடந்துகொள்வார்கள். ஆனால் வஞ்சனை இருக்காது. உள்ளிடு உள்ளவர்களில் பலர் நாகரிகமாக நடந்துகொள்வர். ஆனாலும் வஞ்சனை இருக்கும்.”