பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

19



140. “பொறிகள் வாயிலாக உடலுக்கும், புலன்கள் வாயிலாக உயிருக்கும் உணவு கிடைக்கிறது. முன்னதற்கு உணவு என்றும் பின்னதற்கு உணர்வு என்றும் பெயர்”.

141. “பொறிகள் புலன்களின் அனுபவத்திற்குக் கிடைக்கும் செய்திகளைப் பொறுத்தே மனிதன் வளர்கிறான்; வாழ்கிறான்”·

142. “எரிந்த மெழுகுவர்த்திகள்” என்று பெண்களை வர்ணிக்கும் எழுத்தாளர்கள் “எரிந்த விறகுகள்” என்று ஆண்களை மாற்றி எழுதுவார்கள்”.

143. “அந்தமான் அருண்” என்பவர் “திருட்டு நண்டு” என்று ஒரு கட்டுரை ஆங்கிலத்தில் எழுதியுள்ளதைப் படித்துப்பார்த்தோம். மிக நல்ல கட்டுரை. தமிழில் திருட்டு நண்டு என்று மொழி பெயர்த்துள்ளார். ஆனால் நண்டு உலகத்தில் உடைமைச் சமுதாயம் இல்லை”.

144. “கவிஞர்கள் மிக உயரச் சிந்திக்கிறார்கள். ஆனால் சமுதாயமோ மிகமிக அதல பாதாளப் பள்ளத்தில் கிடக்கின்றது. சமுதாய அமைப்பில் அடிப்படையான முழுமையான மாற்றங்கள் ஏற்படுத்தாத வரையில் இக்கவிதைகள் பயனற்றுப் போய்விடும்”.

145. “விடுதலைப் போராட்டம் என்பது எவ்வளவு துன்பமானது என்பதை அந்தமான் செல்வோர் சிறைக் கூடத்தை ஒருதடவை பார்த்தாலும் அறிந்து கொள்ள இயலும். விடுதலைப் போராட்டத்தின் அருமைகளை உணர்ந்தவர்கள் சுதந்திரத்தின் வழிப்பட்ட உரிமை”.