பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தவத்திரு அடிகளார்


தலைவிதியே என்று கேட்கின்றனர். இவர்களோ, மக்கள் தமது உரைகளை மதித்து கேட்பதாக நினைத்துக் கொள்கின்றனர்.

407. “உரிமைகளுக்காக உறவுகளை அறுத்துக் கொள்ள நினைப்பதைவிட கட்டாயப்படுத்தி உரிமை கொண்டாடுகிறவர்கள் வரவேற்கத்தக்கவர்கள்.”

408. “காலம், கருத்து, செயற்பாடு மூன்றும் ஒன்றிவிடின் வெற்றியே!”

409. “விழாக்களில் கவனம் செலுத்துவோர் ஏன் வாழ்க்கையில் கவனம் செலுத்த மறுக்கிறார்கள்? விழா முயற்சிகள் ஒன்று முகமன், அல்லது பழக்கம் காரணமாக இருக்கலாம்.”

410. “ஆழ்கடலில் ஆழ மூழ்கிக் குளித்தால் முத்து எடுக்கலாம்; அதுபோலக் கடமைகளில் ஆழமான ஈடுபாடு கொண்டால் வெற்றி கிடைக்கும்.”

411. “பரம்பரைக் குணம் மாற, அதிகமான அளவில் சமூக மருத்துவம் செய்யவேண்டும்.”

412. “தாயோடு, அன்புடைய மாமனோடு மாமி யோடு ஒத்து வாழும் இயல்பில்லாதவர்கள் ஊர்ச்சேவைக்கு முன் வருகின்றனர்; பலன் எதிர்மறைதான்!”

413. “கட்புலனுக்குச் சான்றுகளைத் தராத பணிகள் நம்பத் தகுந்தவையல்ல.”

414. “நாள் மங்கல நாள் சடங்குக்குரிய ஒரு நாள் அல்ல. வடை பாயசத்திற்குரிய நாள் அல்ல. வாழ்க்கையின் மகசூலைக் கணக்கெடுத்து அதன் பயன்பாட்டைக் கண்டு உணர்வு பூர்வமாக மகிழும் நாள்! இன்று மகசூலே இல்லை! உபயோகமான காரியங்கள் நடவாதது மட்டுமல்ல. செய்ய வேண்டுவனவற்றைக் கூடச் செய்யாமல் துன்பம் விளைந்