பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

51


திருக்கிறது. கடன்சுமை வந்திருக்கிறது. இதற்குப் பிறகும் நாண்மங்கலம் கொண்டாட்டம் என்று கூறினால் அழத்தான் தோன்றுகிறது.”

415. “திருமணம் என்றால் பொன்னணி புத்தாடைகள் எல்லாம் மகிழ்ச்சியின் சின்னங்கள்! ஆனால் இவை இன்று மகிழ்ச்சியின் சின்னங்கள் அல்ல. கடன் சுமை. துன்பச் சுமை! ஏன் இந்தப் பைத்தியக் காரத்தனம் பொன்னணியும் புத்தாடையும் இல்லாது போனால் திருமணம் நடக்காதா? காதல் தோன்றாதா? களவியல் இன்பம் இருக்காதா?”

416. “தகவல்கள் தருவது என்பது தகவலுக்காக மட்டுமல்ல. செயற்பாட்டுக்குத்தான். அதனால் செயற்பாட்டுக்குரிய காலத்தில் தகவல் தருவது அவசியம்.”

417. “பனம் வரவு - செலவு செய்வதும் பண்பாட்டை வளர்க்கும் வாயில்களில் ஒன்றேயாம்.”

418. “எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்கிறவர்களை இலட்சிய வாழ்க்கைக்கு உழைப்பு வாழ்க்கைக்குத் துணையாகக் கொள்ளுதல் கூடாது.”

419. “அன்றாடம் நிதி வரவு-செலவுகளை எழுதிப் பார்க்கும் பழக்கமே செல்வத்தைச் சேர்க்க உதவி செய்யும்.”

420. “அன்றாடம் நிதி வரவு-செலவுகளை எழுதிப் பார்க்கத் தவறினால் ஊழல் ஏற்பட்டு நிதி அழியும்.”

421. “உணர்வுக்குச் சம்பந்தமில்லாமல் மலம் சலம் கழிந்தால் நோய். அது போன்றதே ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லாத நிர்வாகமும் நோயே!”