பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

55


அதுபோல எளிய மனம் படைத்தவர்களை எளிதில் அழைத்துச் செல்லலாம். ஆனால், கடினச் சித்தம் உடையவர்களை அழைத்துச் செல்ல முடியாது.”

454. “மக்களிடத்தில் முன்னேற்றப் பசியைத் தோற்றுவித்துவிட்டால் காரியம் எளிது.”

455. “நிர்வாகம் கடினமானது. ஆனால் முற்காப்பு தற்காப்பு உணர்வு உடையவர்கள் நிர்வாகம் செய்வார்கள்.”

456. “செல்வம் என்ற சகடைக்கு ஈருருளைகள்-ஒன்று ஈட்டுதல்; மற்றொன்று சேமித்தல்.”

457. “மூடிவைக்காத பதார்த்தம் கெட்டுப் போகும். கண்காணிக்காத மனிதர்களும் கெட்டுப் போவார்கள்.”

458. “ஒரு வழக்கில் மாட்டிக் கொண்டவர்கள். நீதி வழங்க இயலாது.”

459. “வதந்திகளோடு வாழ்பவர்கள் நல்லவர்கள் அல்லர்.”

460. “சார்புள்ளம் நடுநிலை மனம் பெறுதல் அரிது. ஒரு சிலரே சார்புகளைக் கடந்தும் நடுநிலையில் நிற்பர்.”

461. “உடலுக்கு நோய் வந்தால் விரைந்து மருத்துவம் செய்துகொள்ளும் மனிதர்கள் உள்ளத்திற்கு வரும் நோய்களுக்கு மருத்துவம் செய்துகொள்ள முயலுவதில்லை.”

462. “கிராமப்புறத்துப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உடல்நலமில்லாதபோது, மருத்துவர்களை ஆர்வத்துடன் நாடுகின்றனர். அதுபோல