பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தவத்திரு அடிகளார்



495. “பழக்கங்கள் என்பன உயிரை அடிமைப் படுத்துகின்ற, உடலுக்கு வாய்ப்பான கருவிகள்.”

496. “உடல் அடம் செய்தால், அதனை அடக்க நோன்பிருக்கலாம்; கால்நடை யாத்திரை மேற்கொள்ளலாம். ஆனால் உடலை அடக்கும் சக்தியற்றவர்களும் அறிந்தே மோசடி செய்பவர்களும் பாட மறைப்பிற்காக யாத்திரை செய்கின்றனர். பாபங்கள் கடவுளால் மன்னிக்கப்படுபவையல்ல.”

497. “உணர்ச்சி, சூழ்நிலையின் ஆற்றலால் தோன்றுவது: அறிவொடு தொடர்பில்லாதது. உணர்ச்சி பெரும்பாலும் மிருகத்தன்மையுடையது. அறிவார்ந்த உணர்வுகளே வாழ்க்கைக்கும் பயன் தரும்.”

498. “இறைவன் பலதரம் அவதாரம் எடுத்ததன் நோக்கம், மனிதனை மீட்பதற்காக மட்டுமல்ல. மனிதனுக்கு வாழ்க்கையின் இயல்புகளை வாழ்ந்து காட்டிக் கற்பிப்பதற்காகவேயாம்.! அதுமட்டுமல்ல. அவனுக்கு மனிதர்களுடன் வாழ்வதில் அவ்வளவு ஆனந்தம்.”

499. “உணவில் பல்வகை பொருள் சேர்ப்பதற்குக் காரணம் ருசிக்காக மட்டுமல்ல. பல்வகை ஊட்டங்கள் உடலியக்கத்திற்குத் தேவைப்படுகின்றன. உணவுப் பொருள்களில் எந்த ஒரு உணவிலும் உடலைப் பூரணத்துவத்துடன் இயக்கப் போதிய சக்தியில்லை. அதனால் பல்வகை உணவு, தேவை.

500. “மனிதனை ஆட்கொள்ளும் நம்கடவுளுக்குப் பல உருவங்கள் தேவையில்லை. ஆனால் கடவுள் தன் விருப்பப்படி உலகை இயக்குவதில்லை. ஆட்