பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

63


முடியாமல் தவிக்கின்றனர். அதுபோலத்தான் பலர் கூடி வாழ்ந்தாலும் பணி செய்யும் பாங்கில் தோன்றும் இடர்ப்பாடுகளைக் கடக்க மறுக்கின்றனர்.”

517. “தொண்டும், துணிவும் இடைவிடா முயற்சியும் கடின உழைப்பும் தேவை.”

518. “ஏழைகளின் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் முதலாளிகள் கண்டுபிடித்த பாதுகாப்பு முயற்சியே இனாம்; தருமம் முதலியன.”

519. “கடின உழைப்பே, உரிமையின் தாய்.”

520. “முறையாகக் கட்டப்பட்ட கட்டடத்தின் மேல், மாடி காட்டுவது எளிது. அதுபோல வளர்ந்த நிறுவனங்கள் மேலும் வளர்ச்சியை எளிதாக்கும்.”

521. “பிரச்சாரம் வலிமையான கருவி. இந்த பிரச்சாரக் கருவியின்மையால் மானிடச் சாதிக்கு நலம் பயக்கும் இயக்கங்கள் தோற்று, மானிடத்திற்குத் தீமை செய்யும் இயக்கங்கள் வெற்றி பெற்றுவிட்டன.”

522. “மானிடத்திற்குத் தீமை செய்யும் இயக்கங்கள் வெற்றி பெற்று வருவதன் விளைவுகளை கொடிய வறுமையினாலும் கெட்ட போலி உலகத்தின் இயக்கத்தாலும் காண முடிகிறது.”

523. “கடவுளைக் கண்டது மாதிரி”-இது ஒன்று முகமன் அல்லது நடிப்பு அல்லது அறியாமையின் வெளிப்பாடு என்ற சூழ்நிலைகளில் சிக்கியவர்கள் கூறுவது.”

524. “பெரியார்-கலைஞரின் கடுமையான பார்ப்பன எதிர்ப்பு-அவர்களுக்கு எம்.ஜி.ஆர்.ஐக் கொடையாகத் தந்துவிட்டது.”