பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தவத்திரு அடிகளார்752. “உழைத்துப் பெறாத செல்வம் அருமையாகக் கருதப் பெறமாட்டாது.”

753. சாக்கடை முதலியவற்றின் தேக்கத்தைக் காத்திருக்கும் கொசு போல, சமூக நிகழ்வுகளில் ஏற்படும் தீமைகளைக் காத்திருப்பர் கயவர்.”

754. “கூட்டுக்கடை வைத்திருப்பவர் திடீரென்று கூட்டுக்காரருக்குத் தெரியாமல் தனிக்கடை வைப்பது ஐயத்திற்கு இடமளிக்கும்.

755. “நாத்திகத்திற்கு வள்ளுவம் ஆணை நிற்காது.”

756. தாம் செய்யும் பணிகளை மதிப்பீடு செய்ய மறுப்பது, பணிகளைப் பயனுறச் செய்ய விரும்பாமையே யாகும்.”

757. “பணிகள் பகிர்வே நிர்வாகம்; பகிர்வுகள் பொறுப்புடன் நிறைவேற்றப்படாது போனால் நொய்ம்மையே தோன்றும்.”

758. “நாட்டு மக்களைத் தொழிலாளர்களாகவே ஆக்கவேண்டும்; கடன்காரர்களாகவும் வியாபாரிகளாகவும் ஆக்கக்கூடாது.”

759. “உற்பத்தியொடு தொடர்பில்லாத எதுவும் புண்ணியமான கடமையாகாது.”

760. “நல்ல பணி, விளம்பரம் இல்லா மலர்த் தோட்டம்.”

761. “ஒழுங்குப்படுத்தப் படாத செயலால் ஒன்பது நடக்க வேண்டிய இடத்தில் ஒன்றுதான் நடக்கும்.”

762. “நிதானமற்றவர்கள், மற்றவர்களின் மானத்தை, கீர்த்தியைப் பழிக்கின்றனர்.”