98 பல ஆண்டுகளாக நட்சத்திர உதயத்தையும், நைல் நதி வெள்ளத்தையும் சரியாகக் கவனித்த பின்னர், ஆண்டொன்றுக்கு 365 நாள் என்ற முடிவுக்கு வந்தனர். 30 நாட்கள் கொண்ட 12 மாதங்களும், எந்த மாதத்திலும் சேராத 5 நாட்களும் கொண்ட வருஷம் அவர்களால் ஏற்படுத்தப் பட்டது. மாதங்கள் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணப் பட்டன. பெயர்கள் அளிக்கப்படவில்லை. ஆனால் ஆண்டுகள் காலண்டர் என்ற வரையறையில் சுத்தமாகக் கணிக்கப்பட வில்லை. ரோம் நகரம் வல்லரசின் தலைநகராகாத காலம்.வாணி பத்தில் சிறிது வளப்பமெய்திச் சிறு அரசாக விளங்கியது. அங்கு சமூக, அரசியல் விவகாரங்களில் மதகுருமார்களுக்குத் தாம் முதலிடம் இருந்தது. அவர்களால் நிர்ணயிக்கப்படுகிற காரியங்களில் நாள், கிழமை, மாதம் இவைகளைக் குறிப்பிடுவதும் ஒன்றாகும். மாதத்தின் முதல்நாளை மதத் தலைவர் அறிவிப்பார். இந்தச் செய்தி பறை அறைந்து பல ஊர் முழுவதும் அறிவிக்கப்படும். • மாதத்தின் முதல் நாளைக்கு 'காலண்ட்ஸ்' என்று பெயர். லத்தீன் மொழியில் காலண்டர் என்ற சொல்லுக்கு அழைப்பது என்று பொருள். ஆங்கில மொழியில் அழைப்பது என்பதைக் குறிக்கும் 'கால்' என்ற சொல்கூட இதனடியாகப் பிறந்த தாகும். கூவியழைத்து அறிவிக்கப்பட்டதன் காரணமாக மாதத்தின் முதல் நாள் காலண்ட் என்றும், அதனடியாகக் காலண்டர் என்ற பெயரும் உண்டாயின. . ரோம் நாட்டில் மார்ச்சிலிருந்து டிசம்பர் வரை பத்து மாதங்கள்தாம் முதலில் கணக்கிடப்பட்டன. கவனித்துப் பார்த்தால் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என்ற பெயர்கள் 7வது, 8வது, 9வது, 10வது மாதம் என்ற அர்த்த முடையன. கொஞ்ச காலத்திற்குப்பின் பாபிலோனியர்களைப் போல 354 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் வழக்கில் வந்தன. இரட்டைப்படை எண் நல்லதல்ல என்ற எண்ணம்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/100
Appearance