உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 அவர்களுக்கிருந்ததால் ஆண்டுக்கு 355 நாட்கள் கணக்கிடப் பட்டன. 12 மாதங்களும் முறைறே 29,28,31,29,31,29, 31,29,29,31, 29, 29 நாட்களுடையன. ஆண்டொன்றுக்கு 10 இந்தக் கணக்கின் பேரில் நாட்களுக்கு மேல் குறைந்துவிடுகிறது. நாலைந்து ஆண்டு களுக்குள் ஒரு மாதத்திற்குமேல் பிசகிவிடும். இந்தப் பிழையை நீக்க கிரேக்கர்கள் செய்ததைப்போல மூன்று நான்கு ஆண்டு களுக்கொருமுறை ஒரு மாதம் கூட்டப்பட்டது. இவ்வாறு ஆண்டுக்குள்ள மாதங்களைக் கூட்டிக் குறைக்கும் உரிமை குருமார்கள் கையில் இருந்தது. இந்த உரிமை நாளடைவில் வீணாகக் கையாளப்பட்டது. இரண்டு மூன்று ஆண்டுகளுக் கொரு முறை வழக்குகளைத் தீர்க்க நீதிபதியைத் தேர்ந்தெடுப் பார்கள். குறிப்பிட்ட ஆண்டுகள் முடிந்ததும் நீதிபதி தன் இடத்தைக் காலி செய்வார். மற்றொருவர் அந்த இடத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒரு நீதிபதி, தனக்கு வேண்டிய வனாயிருந்தால் அந்த ஆண்டைச் சீக்கிரம் முடித்துவிடுவார். தீர்ப்பு வழங்குவதைப்போலவே வரி வசூலிப்பது, குத்தகை கொடுப்பது போன்று பல வேலைகள் குறிப்பிட்ட வருஷங்கள் முடிந்ததும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் போய்விடும். தனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் இவர்களைக் கணக்கிட்டுத்தான் குருமார் ஒரு வருஷத்தின் மாதங்களைக் கணக்கிட்டார். எனவே காலவரையறை பிசகிவிட்டது. குருமார் குறிப்பிடும் எவையும் சரியான பருவத்தில் வருவ தில்லை. ஜூலியஸ் சீசர் அதிகாரத்துக்கு வந்தபொழுது, ரோம் காலண்டர் குருமார்களின் ஆதிக்கத்தில் மிகவும் பிசகியிருந் தது. அதன் உச்ச நிலையில்தான் நாம் ஆரம்பத்தில் குறிப் பிட்டபடி வசந்தவிழா கோடையில் வந்தது. நாட்டின் அரசாங்கத்தையும், சட்டதிட்டங்களையும் ஒழுங்குபடுத்து வதற்குமுன் காலஅமைப்பைக் கட்டுப்படுத்தச் சீசர் முற்பட் டான். பல ஆண்டுகளாக வெற்றிப்பாதையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றைச் சந்தித்திருக்கிறான்.