உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 அவனது கரம் ஒரு சமயம் எகிப்து நாட்டையும் எட்டிப் பிடித்தது. நைல் நதியில் அன்னப் படகில் உல்லாசமாக வாழ்ந்த ஆரணங்கு கிளியோப்பாட்ராவின் அழகு கண்டு வியந் தவன் மட்டுமல்ல, அதே நைல் நதிக்கரையில் இரவுபகலாகக் கஷ்டப்பட்டு வானத்தில் மின்னிடும் நட்சத்திரங்களின் போக்கை ஆராய்ந்தறிந்த வானநூல் வல்லுநரின் பரந்த அறி வையும் கண்டு வியந்தவன். ஆகவே, ரோம் காலண்டர் அமைப்புத் தவறு என்று தெரிந்தபொழுது, அதைத் திருத்தி யமைக்குமாறு சொரிஜினஸ் என்ற எகிப்து வானநூல் அறிஞரை அழைத்தான். ரோம் காலண்டரில் அதுவரை நேர்ந்த பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு, புதிய காலண்டர் அமைக்கப்பட்டது. திருத்தப்பட்ட காலண்டருக்கு ஜூலியன் காலண்டர் என்று பெயர். அதுதான் தற்பொழுதுள்ள காலண்டர் அமைப்புக்கு அடிப்படையாக உள்ளது. . சீசர் காலம்வரை மார்ச் மாதம்தான் ஆண்டுக்கு ஆரம்ப மாதமாகயிருந்தது. சீசர் அதைமாற்றி ஜனவரி 1ந் தேதியை வருஷ ஆரம்பமாக்கினான். ஜூனுக்கு அடுத்த கியுன் டிலியஸ் என்ற மாதப்பெயரை மாற்றி ஜூலையென்று தன் பெயரால் அதை அழைத்தான். ஜூலியன் காலண்டர்படி ஆண்டு ஒன் றுக்கு 365 நாள். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் கூட்டப்படும். 366 நாள் கூடிய அந்த ஆண்டு லீப் வருஷம் என்று கூறப்பட்டது. ஜூலியன் முறைப்படி மாதங்களும் நாட்களும் கீழ்க்கண்டவாறு முதன் முதலில் வகுக்கப்பட்டன. ஜனவரி பிப்ரவரி மார்ச் .3 1 -29 அல்லது-30 (கூடிய ஆண்டு) -31 ஏப்ரல் .30 மே -31 ஜூன் .30 ஜூலை -31 செக்ஸ்டிலியஸ் ―30